TamilSaaga

‘இணையவழி குற்றங்கள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளது’ – காரணம் என்ன ?

சிங்கப்பூரில் இணைய வழியில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சுமார் 70 விழுக்காடு அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் குற்றச் சம்பவங்கல் தொடர்பாக பெறப்பட்ட புகார்களில், கிட்டத்தட்ட பாதி அளவிற்கு மேல் இணைய குற்றங்கள் தொடர்புடையவை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 16 ஆயிரத்திற்கும் அதிகமான இணையவழி குற்றங்கள் பற்றிய புகார்கள் பெறப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை இணைய மோசடி தொடர்பானவை, அதற்கு முந்தைய ஆண்டுகளில் சுமார் 9300 இணைய குற்றங்கள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

இந்த பெருந்தொற்று சூழலில் சிங்கப்பூரில் இணைய வழி பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பது அதற்கு ஒரு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நிறுவனங்கள் தங்களுடைய இணைய வழி பரிவர்த்தனைகளை மிகுந்த பாதுகாப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts