TamilSaaga

Just In : “கட்டுமான, கப்பல் துறை ஊழியர்கள்” : இனி VTL மூலம் சிங்கப்பூர் வரப் பதிவு செய்ய அனுமதி இல்லை – MOM

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் புதிதாக பரவிவரும் தொற்று மாறுபாட்டின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று டிசம்பர் 4 சனிக்கிழமை இரவு 11. 59 முதல் கட்டுமானம் மற்றும் கப்பல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் VTL எனப்படும் தடுப்பூசி பயணப்பாதை மூலம் சிங்கப்பூருக்கு வர அவர்களால் பதிவு செய்ய முடியாது என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : 50 குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றம்

மேலும் தற்போது அமலாகும் இந்த புதிய கட்டுப்பாடு எஸ் பாஸ், வேலை அனுமதி மற்றும் சிங்கப்பூரில் விடுதியில் வசிக்கக்கூடிய வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை டிசம்பர் 4ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்த தொழிலாளர்கள் சிங்கப்பூருக்கு VTL மூலம் வர அனுமதிக்கப்படுவார்கள். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் பணியிடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமானத் துறைகளிலும் கப்பல் கட்டும் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் அந்தந்த துறைகளில் தற்போது இடம்பெறுகின்ற பயண திட்டங்களின் வழியாக மட்டுமே இனி சிங்கப்பூருக்கு வர முடியும். அல்லது அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான பொது பயண ஏற்பாட்டின் வழியாகவும் அவர்கள் சிங்கப்பூருக்குள் வர முடியும்.

சிங்கப்பூருக்கு வந்த பிறகு அவருக்கு மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகளை முழுமையாக முடித்ததற்கு பிறகு விடுதிக்கோ அல்லது வேலையிடத்திற்கோ அவர்கள் செல்லலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts