கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) மாலை பிராடெல்லில் உள்ள ஒரு தனியார் குடியிருப்புத் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) இரவு 7.30 மணியளவில் பிராடெல் வியூவில் உள்ள பிளாக் 10C பிராட்டெல் ஹில்லில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாகக் தனது முகநூல் கூறியது. “SCDF வந்தவுடன், 12 வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பு யூனிட்டில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது,” என்றும் அந்த முகநூல் பதிவில் SCDF கூறியது.
இதையும் படியுங்கள் : VTL நிபந்தனைகளில் மாற்றம் – Detailed Report
தீயணைப்பு வீரர்கள் “அதிகமாக புகைபிடித்த குறிப்பிட்ட அந்த யூனிட்டிலுக்குள்” நுழைந்தனர். இந்த தீ விபத்தில் ஒரு படுக்கையறையில் இருந்து பரவியதாக SCDF தெரிவித்துள்ளது. வாட்டர் ஜெட் மற்றும் இதர தீயணைப்பு சாதனங்களை கொண்டு தீ உடனடியாக அணைக்கப்பட்டது. SCDFன் வருகைக்கு முன்னர் அந்த யூனிட்டின் குடியிருப்பாளர்கள் தாங்களாகவே வெளியேறிவிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SCDF மற்றும் காவல்துறையினரால் அந்தத் தொகுதியில் வசிக்கும் சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், இந்த தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.