TamilSaaga

“அசைவின்றி சாலையில் கிடந்த கல்லூரி மாணவர்” : துரிதமாக செயல்பட்டு உயிரை காத்த செவிலியர் – குவியும் பாராட்டு

மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி, சாலையில் இதயத் துடிப்பின்றி கிடந்த கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு தற்பொழுது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருவான்குறிச்சியை சேர்ந்த இளைஞர் வசந்த். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் வசந்த் லக்னாம்பேட்டை என்ற கிராமத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதினர்.

இதையும் படியுங்கள் : மேலும் 7 நாடுகளை “High Risk” பட்டியலில் இணைத்தது சிங்கப்பூர்

இந்நிலையில் விபத்து ஏற்பட்டு சாலையில் விழுந்த வசந்த் சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மன்னார்குடி அரசு மருத்துவமனையை சேர்ந்த ஒப்பந்த செவிலியர் வனஜா அவர்கள் துரிதமாக செயல்பட்டு அவருடைய உயிரை காப்பாற்றியுள்ளார். மாணவர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு கிடப்பதை கண்டு காரில் இருந்து இறங்கிய வனஜா உடனடியாக வசந்துக்கு CPR சிகிச்சை செய்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு ரத்த ஓட்டம் சீராகி மீண்டும் அவருடைய இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனையடுத்து மாணவர் உயிர் பிழைத்துள்ளார், உடனடியாக மாணவர் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

உயிருக்காகப் போராடிய மாணவரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய செவிலியருக்கு பல தரப்பினரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts