பிப்ரவரி 2022 முதல் பதினைந்து நாட்களில் சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு சேவை சிங்கப்பூர் (MSS) அளித்த தகவலின்படி, பெரும்பாலான நாட்களில் மதிய நேரத்தில் சிங்கப்பூரின் வெகு சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது, மேலும் அந்த மழையானது ஒரு சில நாட்களில் மாலை நேரம் வரை நீடிக்கலாம் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து.
சுதந்திர வாழ்க்கை எப்போது? விலங்குகளா நாங்கள்? – சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேதனை.. ஏன்?
சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பால் தூண்டப்பட்ட பரவலாக மிதமான முதல் கனமான இடியுடன் கூடிய மழையும் எதிர்வரும் சில நாட்களில் எதிர்பார்க்கப்படலாம். ஒட்டுமொத்தமாக, 2022 பிப்ரவரி முதல் பாதியில் பெய்யும் மழை, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக MSS கூறியது.
பிப்ரவரி முதல் பதினைந்து நாட்களில், அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை இன்னும் சில நாட்களில் 34°C-ஐ எட்டக்கூடும். பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என MSS தெரிவித்துள்ளது. ஈரமான வானிலை பிப்ரவரி 2022 முதல் பாதியில் நிலவும் வடகிழக்கு பருவமழை காரணமாக நிலவுகிறது. இந்த காலகட்டத்தில் வடமேற்கு அல்லது வடகிழக்கில் இருந்து குறைந்த அளவிலான காற்று வீசுகிறது.
முன்னறிவிப்புக் காலத்தின் முதல் சில நாட்களில், பூமத்திய ரேகை தென்கிழக்கு ஆசியப் பகுதியில் வறண்ட காற்றின் நிறை நிலையான வளிமண்டல நிலைகளையும் பொதுவாக சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலையையும் கொண்டு வரக்கூடும். அதன் பிறகு, பருவமழை மண்டலம் பூமத்திய ரேகைக்கு அருகில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.