TamilSaaga

சிங்கப்பூர்… “பேருந்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம்” – தமிழர்களின் பெருமையை என்றுமே மறைக்காத நமது சிங்கை

தமிழர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் நமது சிங்கப்பூரும் ஒன்று, குறிப்பாக தமிழர்கள் தங்களின் இன்னொரு தாய் வீடாக நினைப்பதும் நமது சிங்கையைத் தான். அதிக அளவில் இங்கு தமிழ் மக்கள் வசிப்பதால் சாங்கி விமான நிலையம் உள்பட சிங்கப்பூரின் பல அரசு மற்றும் தனியார் சார்ந்த இடங்களில் நீங்கள் தமிழில் அறிவிப்பு பலகைகளை காணலாம். அந்த அளவிற்கு இங்கு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் மரியாதை அளிக்கப்படுகிறது.

வெளிநாடு வந்த மூன்றே மாதம்.. பணியிடத்தில் இறந்த தமிழக தொழிலாளி – உடலை பெறப் பரிதவித்த குடும்பத்துக்கு தக்க நேரத்தில் “கைகொடுத்த” தமிழர்கள் நலச்சங்கம்

தமிழ் பேசும் அரசியல் தலைவர்கள் இங்கு பலர் உண்டு அதுவும் அவர்கள் சிங்கப்பூரில் உயர் பதவிகளில் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. அந்த வகையில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் பதித்த பேருந்துகளை இயக்கி வருகின்றது நமது சிங்கப்பூர். இது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளம்பரம் என்றபோதும் இதுபோன்ற தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பல விஷயங்களை சிங்கப்பூர் அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்.. பணியிடத்தில் நடந்த விபத்தால் சக்கர நாற்காலியில் முடங்கிய வாழ்க்கை – நல்ல உள்ளங்களின் உதவியோடு பங்குனி உத்திரத்தில் பங்கேற்ற மாரிமுத்து

தைப்பூசம், பங்குனி உத்திரம் தொடங்கி பொங்கல், தீபாவளி என்று நமது சிங்கப்பூரில் கொண்டாடப்படாத தமிழர்களின் திருவிழா எதுவுமே இல்லை என்றே கூறலாம். சிங்கப்பூரை பொறுத்தவரை இந்த பேருந்தில் மட்டுமல்ல பல இடங்களில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். வேலைக்காக இங்கு வரும் தமிழர்களும் இதை தங்கள் சொந்த நாடாக எண்ணியே வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூரும் அவர்களை மனமகிழ்ச்சியோடு வரவேற்று நல்ல முறையில் பாதுகாத்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts