TamilSaaga

முருகனைக் காண ஜுராங் ஈஸ்ட் பகுதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்…’ஓம் முருகா’ என பக்தி பரவசத்துடன் வழிபாடு!

சிங்கப்பூரின் ஜுராங் ஈஸ்ட் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமையான நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். காலை சுமார் 8 :15 மணி அளவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் காலை 6:00 மணி முதலே பக்தர்கள் திரண்டு அருள் பெற காத்திருந்தனர்.

பக்தர்கள் அனைவரும் ஓம் முருகா என பக்தி பரவசத்துடன் ஒலியெழுப்பிய நிலையில் கோபுரத்தின் ஐந்து கலசங்கள் உட்பட அனைத்து சன்னதிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டன.அதைத்தொடர்ந்து எல்லா தெய்வங்களுக்கும் தீபாதாரணை காட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் கோவிலுக்குள் சென்று முருகனை வழிபட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த விழாவில் சுற்றுப்புற அமைச்சர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். பக்தர்களின் வசதிகளுக்கு ஏற்ப நாற்காலிகள், அன்னதானம் ,குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன .மேலும் கோவிலில் உள்ளே நடைபெறும் பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் பக்தர்களின் எல் இ டி திரையின் மூலம் காண்பிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கும்பாபிஷேக விழாவானது எப்பொழுதாவது ஒருமுறைதான் நடைபெறும் நிலையில் விழாவினை காண ஏராளமான வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related posts