TamilSaaga

வாடகை வீட்டை வேறொருவருக்கு வாடகைக்கு விட்ட நபர்.. உதவி செய்த அதிகாரி – 25 நாள் ஜெயில்

சிங்கப்பூரில் வாடைகைக்கு குடியிருந்த வீட்டை சட்டவிரோதமாக பலருக்கு வாடகைக்கு விட்ட நபர் ஒருவர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு அந்த நபரான 23 வயது இந்திய நாட்டவர் தாம் குடியிருந்த வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும் சூழல் வந்தது.

மேலும் தன் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் ஒப்புக்கொண்டதன் படி அவருக்கு 25 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தமன்தீப் தான் குடியிருந்த வீட்டை வேறொரு நபர்களுக்கு வாடகைக்கு விட்டார். அதில் சுமார் ஏறக்குறைய 12 அல்லது 13 பேர் வசித்துள்ளார்கள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் சுமார் $200 வரை வசூலித்திருக்கிறார் . தமன்தீப் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டார்.

இந்நிலையில் அந்த வீட்டில் அதிகாமானோர் வசிப்பது மற்றும் இரைச்சல் ஆகியவற்றால் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் சோதனையில்பல் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவருக்கு உடந்தையாக அமலாக்க அதிகாரி கலையரசன் என்பவர் இந்த குற்றங்களுக்கு உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டு கலையரசனுக்கு 25 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts