TamilSaaga

பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து சாதனை புரியும் சாங்கி விமான நிலையம்… செப்டம்பர் மாதம் மட்டும் 4.87 மில்லியன் பயணிகள் வருகை!!

கொரோனா நோய் தொற்றின் காரணமாக சாங்கி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த பயணிகளின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்துள்ள நிலையில் தற்போது விமான நிலையம் ஆனது மீண்டும் வளர்ச்சிக்கான ஆரம்பித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தில் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 4.87 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 89 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை சுமார் 15.3 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாடுகளைப் பொறுத்தவரை சீனா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அதிகப்படியான மக்கள் சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளனர். விமான நிறுவனங்களை பொருத்தவரை அக்டோபர்1- ம் தேதி நிலவரப்படி இதுவரை 94 விமான நிறுவனங்கள் 6400-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒரு வாரத்திற்கு அட்டவணைப்படுத்தியுள்ளன.

மேலும் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள 44 நாடுகளில் சுமார் 151 நகரங்களுடன் பயணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் புதியதாக இரண்டு விமான நிலையங்களுக்கிடையில் சேவை தொடங்கப்பட்டது .கொரோனா நோய் தொற்றுக்கு பின்னர் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில் பயணிகளின் எண்ணிக்கையானது இனிவரும் காலங்களிலும் அதிகரித்து புது வரலாறை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts