சிங்கப்பூர், ஆச்சரியங்களை அணிவகுக்கும் ஒரு மிகச்சிறந்த நகரம் என்றால் அது எந்தவிதத்திலும் மிகையாகாது. இந்நிலையில் நமது Nanyang பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.
Nanyang பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களில் சிலர் சிறுநீரையும், தொழில்துறை கழிவுகளையும் மறுபயனீடு (Reuse) செய்யக்கூடிய சிமெண்ட்டாக மாற்றும் யுக்தியை தற்போது கண்டறிந்துள்ளனர்.
சிறுநீரையும், தொழில்துறை கழிவுகளையும் நுண்ணுயிரிகளுடன் களுடன் கலக்கும்போது இந்த அரியவகை சிமெண்ட் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வழக்கமாக கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் சிமெண்ட், மணலோடு கலக்கும் பொழுது கிடைக்கும் உறுதியை விட இவ்வகை சிமெண்ட்கலுடன் கலக்கும் போது கிடைக்கும் உறுதி அதிகமானது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வகை சிமென்டுகளை குறிப்பிட்ட சில வகை கட்டுமானங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடற்கரைகளில் மணல் அரிப்பைத் தடுக்கவும், பாலைவனங்களில் நீர்நிலைகளை கட்டவும், ஏன் சில இடங்களில் விழும் விரிசல்களை சரி செய்யவும் இவ்வகை சிமென்டுகளை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிமெண்ட்க்கு தேவையான மூலப் பொறுட்களாகிய சிறுநீர் மற்றும் தொழில்துறை கழிவுகளும் இலவசமாக நமக்கு கிடைக்கும் என்பதாலும் இந்த சிமெண்ட்களைத் தயாரிக்க சாதாரண வெப்பநிலையை போதும் என்பதாலும் இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாகவும் மலிவானதாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.