TamilSaaga

சிங்கப்பூர் கிளமெண்டி வனப்பகுதி.. இரு இயற்கை வழித்தடங்கள் – 2030க்குள் தயார் செய்ய முடிவு

சிங்கப்பூரில் இரண்டு இயற்கை வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் கிளமெண்டி வனப்பகுதியின் சில இடங்கள் அரசால் பாதுகாக்கப்படும் என்றும் சிங்கப்பூரின் தேசிய பூங்காக் கழகம் தற்போது அறிவித்துள்ளது. உலக அளவில் இயற்கை வளங்களை பாதுகாத்திடவும், அதில் வாழும் விலங்குகளை பாதுகாக்கவும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் செழுமையான வனப்பகுதியை அங்குள்ள விலங்குகளையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பல இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது. ஒரு 7 கிமீ பாதை பழைய ஜூரோங் ரோடு வழியாக இயங்கும். சிங்கப்பூரில் 1990களின் முற்பகுதியில் செயல்பாட்டை நிறுத்திய ஒரு பயன்படுத்தப்படாத ரயில் பாதை, மற்றும் ஜூரோங் லேக் கார்டன்ஸுடன் இணைக்கப்பட்ட ஒரு புதிய பூங்கா இதில் அடங்கும்.

மேலும் மற்றொரு 2 கிமீ பாதை கிளமெண்டி வன நீரோட்டத்தை ஒரு புதிய இயற்கை பூங்காவுடன் இணைக்கிறது, இது உலு பாண்டன் மேற்கில் தொடங்கப்பட உள்ளது. தற்போதுள்ள பூங்கா இணைப்புகளுடன், புதிய வழித்தடங்கள் 18 கிமீ பாதைகளுடன் பசுமை நிலையை உருவாக்கும் என்று தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம், பொதுமக்களின் இயற்கை அழகை மிகச்சிறந்த முறையில் அனுபவிக்கமுடியும். “இயற்கையில் நகரத்தை” உருவாக்க 2030 ஆம் ஆண்டுக்குள் 360 கிமீ பொழுதுபோக்கு வழிகளை உருவாக்க வேண்டும் என்பதே சிங்கப்பூரின் நோக்கம்.

Related posts