TamilSaaga

ஹாஜி பெருநாள்.. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – நன்றி சொன்ன MOM

சிங்கப்பூரில் அண்மையில் நடந்து முடிந்த ஹரி ராயா ஹாஜி பண்டிகைக் காலத்தில், தன்னார்வலர்கள் இருவர் ACE குழுவின் ஆதரவுடன், சிங்கப்பூரில் பணியாற்றி வரும் 1,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களை தங்களுடைய நண்பர்களாக பாவித்து பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொழுதுபோக்கு மையங்களுக்கும் இன்னும் பல இடங்களுக்கு வருகை தருவதால், அவர்களின் மனநிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். மேலும் அங்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகமூடிகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வுகளில் பங்குகொண்ட 35 வயதான கட்டுமானத் தொழிலாளி, ரகுமான் மிசானூர், “ஹெல்த் சர்வ்” நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். “நாங்கள் கவனித்துக்கொள்ளப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் கூறினார்.

மேலும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தீவு முழுவதும் உள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களுக்கு உணவுகள் சமைத்து வழங்கப்பட்டது. பண்டிகை உணவுப்பொருள்களை, உணவு பொட்டலங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களின் நல்வாழ்வை ஆதரிக்க எங்களுடன் அயராது உழைக்கும் எங்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துகொள்ளவதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தங்கள் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

Related posts