TamilSaaga

பொருளாதாரம் மந்த நிலை பாதிப்பின் எதிரொலி… சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் வேலையை தக்க வைத்துக் கொள்வது அவசியம்.. முடிந்த அளவு செலவுகளை சுருக்கங்கள்!

சிங்கப்பூரின் பொருளாதார நிலை குறித்து அண்மையில் வெளியாகி உள்ள புள்ளி விவரங்களின் படி, சிங்கப்பூரில் பொருளாதாரம் மந்த நிலையினை எட்ட வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. அப்படி ஏற்படும் பட்சத்தில் சிங்கப்பூரில் வாழும் PR அல்லாத இந்தியர்களுக்கு அது பின்னடைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் வேலைகளுக்கான காலியிடங்கள் நான்காவது காலண்டாக தொடர்ந்து குறைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சிங்கப்பூர் ஏற்றுமதியானது தொடர்ந்து எட்டாவது மாதமாக சரிந்த வண்ணம் உள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.40 சதவீதம் குறைந்துள்ள நிலையில் வரும் காலாண்டுகளில் இந்த வளர்ச்சி சரி செய்யப்படுமா என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒரு நாடானது இரு காலாண்டுகளாக தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சியில் சரிவினை சந்தித்தால் அந்நாடு மந்த நிலைக்கு சென்றதாக கருதப்படும். அப்படி செல்லும் பொழுது, அங்கு வேலை செய்யும் குடியுரிமை அல்லாத இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 54.50. அதில் 40 லட்சம் பேர் அந்த நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் குடிமக்கள் ஆவர்.
இவர்களில் மூன்று லட்சம் இந்தியர்கள் PR எனப்படும் குடியுரிமை பெற்றவர்கள். மேலும் அதில் 3.5 லட்சம் இந்திய மக்கள் குடியுரிமை பெறாமல் அங்கிருக்கும் WORK PERMIT, E PASS, S PASS,DEPENDENT PASS போன்றவற்றில் வேலை செய்பவர்கள்.

அடுத்த காலாண்டிலும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் பட்சத்தில் குடியுரிமை அல்லாத இந்தியர்களுக்கு எவ்வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை சொல்ல இயலாது. எனவே அங்கு வாழும் இந்தியர்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களது பணியிடங்களை தக்க வைத்துக் கொண்டு, செலவினங்களை சுருக்கி செய்வது சிறந்தது.

ஏற்கனவே கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூரில் வீட்டு வாடகை ஆனது பெருமளவு உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் குறைவான சம்பளத்தில் அங்கு வேலை பார்க்கும் நம் மக்கள் அனாவசிய செலவினை சுருக்கினால் மட்டுமே ஓரளவு சேமித்து தங்களது தாய் நாட்டிற்கு பணத்தினை அனுப்ப முடியும்.

Related posts