TamilSaaga

“சிங்கப்பூரில் வேலையிடத்தில் லாரி மோதி இறந்த இந்திய தொழிலாளி” : 26 வயது லாரி ஓட்டுநர் கைது

சிங்கப்பூரில் கட்டுமான இடத்தில் கான்கிரீட் பம்ப் லாரி மோதியதில் தொழிலாளி ஒருவர் கடந்த வாரம் இறந்தார். 37 வயதான இந்தியப் பிரஜையான அவர் கடந்த செப்டம்பர் 17 அன்று பெடோக் நார்த் பகுதியில் உள்ள பணிமனை வாயிலுக்கு அருகில் ஒரு Traffic Control வேலையில் ஈடுபட்டிருந்தபோது, ​​கேட் மீது மோதிய லாரி அவர் மீது மோதியதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டென்று வேகமெடுத்த அந்த லாரி கதவின் மீது மோதிய நிலையில், அந்த கதவு தொழிலாளி மீது விழுந்தது. அதனை தொடர்ந்து கீழே விழுந்த அந்த கதாவின் மீதும் அதற்கு கீழே இருந்த தொழிலாளி மீதும் அந்த லாரி எறியுள்ளது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மாலை 5.55 மணியளவில் 1 பெடோக் வடக்குத் தெரு 2ல் இருந்து உதவிக்கான அழைப்பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது. சிக்கிய தொழிலாளியை வெளியேற்ற SCDF மீட்பாளர்கள் தூக்கும் கருவிகளைப் பயன்படுத்தினர். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பெயர் குறிப்பிடப்படாத இறந்த அந்த தொழிலாளி லும் சாங் கட்டிட ஒப்பந்தக்காரர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை குறித்து MOM விசாரித்து வருகிறது. மற்றும் பணியிடத்தில் அனைத்து வாகன மற்றும் இயந்திர செயல்பாடுகளை நிறுத்துமாறு லும் சாங்கிற்கு அறிவுறுத்தியுள்ளது MOM. 26 வயதான ஒருவர் கவனக்குறைவான செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வாகனங்களின் இயக்கத்தை பாதுகாப்பாக, நிர்வகிக்க, நிறுவனங்கள் ஒரு பணியிட போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை கொண்டிருக்க வேண்டும் மற்றும் நிறுவன வாகனங்களை தவறாமல் சரிபார்த்து பராமரிக்க வேண்டும். போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பிரகாசமான வண்ணங்களை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டும், இதனால் அது ஓட்டுநர்களுக்கு நன்றாக தெரியும் என்று MOM கூறியுள்ளது.

Related posts