TamilSaaga

“சிங்கப்பூரில் தாறுமாறாக தாக்கிக்கொண்ட பள்ளி மாணவிகள்” – என்ன நடவடிக்கை மேற்கொண்டது கல்வி அமைச்சகம்?

சிங்கப்பூரில் தற்போது இணையத்தில் அதிகம் பரவும் காணொளியில் மூன்று மாணவர்கள் சண்டையிடுவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சுகம் (MOE) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த பள்ளி இந்த சம்பவம் பற்றி அறிந்திருக்கிறது மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் அவர்களின் பெற்றோரை அழைத்து பேசுதல் போன்ற கல்வி நிலையம் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் MOE தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : தென் கிழக்கு ஆசியாவை குறிவைக்கும் சிங்கப்பூரின் “வர்த்தகப் புலி” – பெரும் சக்தி வாய்ந்த வங்கியாக உருவெடுக்கும் UOB

“கல்வி நிலையத்திற்குள் நடக்கும் வன்முறைச் செயல்கள் குறித்து நாங்கள் தீவிரமான பார்வையை எடுத்துக்கொள்கிறோம்” மேலும் இந்த நிகழ்வில் உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் சிங்கப்பூர் காவல்துறை இந்த விஷயத்தை விசாரித்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்து CNA செய்தி நிறுவனம் மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கல்வி அமைச்சகத்தை அணுகியபோது, ​​MOE பள்ளியின் பெயரையோ அல்லது சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்ற தகவலையோ வெளியிட மறுத்துள்ளது. சுமார் 30 வினாடிகள் நீடிக்கும் அந்த வீடியோவில், கார் பார்க்கிங்கில் பள்ளி சீருடையில் இருந்த சிறுமியை அவர் உடன் இருந்த இரண்டு சிறுமிகள் பலமுறை எட்டி உதைப்பதும், குத்துவதும் பதிவாகியுள்ளது. அதிலும் அவர்களுடைய ஒரு உதை அந்த பெண்ணின் முகத்தில் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : காலாவதியான சிங்கப்பூர் “Driving License” : இந்தியாவில் இருந்துகொண்டே புதுப்பிக்க முடியுமா? – Complete Report

CNA-வின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் கலவல்துறையும் ​​எங்கு சண்டை நடந்தது என்ற தகவலையும் அளிக்கவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts