Infenion நிறுவனம், 1999-ல் உருவாக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் உற்பத்தி நிறுவனம். ஜெர்மனியை தாயகமாகக் கொண்ட இது இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருது. 2023 அறிக்கையின்படி இந்த நிறுவனத்துல 58,600 பணியாளர்கள் உள்ளனர். இங்கு Semiconductor எனப்படும் சிப் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது ஒரு பன்னாட்டு நிறுவனம் எனவே இங்கே உள்ள வேலை கலாச்சாரமும் மிக சிறந்ததா இருக்கும். பல நாடுகளில் உள்ள பணியாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு, பல காரியங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ய்பு போன்றவை உங்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும். மேலும் இங்கு கொடுக்கப்படும் ஊதியமும் சிறப்பாக இருப்பதால் பல ஊழியர்கள் அவர்கள் வாழ்க்கையிலும் வேலையிலும் உயர்கிறார்கள். இது தவிர மற்ற நிறுவனங்களில் கொடுக்கப்படும் விடுமுறை, காப்பீடு, வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு போன்றவற்றை வழங்குகிறது.
தற்பொழுது இந்த நிறுவனத்தில் வேலை வாய்ய்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
- Supply Chain Planner
- Procurement Staff
- Software Engineer
- Product Test Engineer
- Product Engineer
போன்ற பல வேலைகள் உள்ளன. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு https://jobs-sg.com என்ற இணையத்தளத்துல வெளியாகி இருக்கு.
இப்பொழுது இந்த வேலைகளைக் குறித்த அறிமுகத்தைக் காண்போம்.
- Supply Chain Planner : ஒரு Project-ஐ எடுத்து முடிக்கும் வரை அது சார்ந்த பணிகளை செய்வதும், project manager மற்றும் இதர Department- களுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்தபடி Project-ஐ முடித்துக் கொடுப்பதுமே இந்த பணியின் பொறுப்பு. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் பட்டம் அல்லது Supply Chain / Business Administration பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் இதுகுறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் -கை கிளிக் செய்யவும்!
https://www.careerjet.sg/jobad/sgbcf6518f79689163c9bb3cbb7daeb2c5 - Procurement Staff : பல்வேறு stakeholder களுடன் பணிபுரிந்து Project-ஐ Procure செய்வதும் அது சார்ந்த தகவல்கள் மற்றும் தேவைகள் அனைத்தையும் project Development Team -க்கு report மூலம் பகிர்வது போன்றவை இந்த வேலையின் முக்கிய பொறுப்பாகும். இதற்கான கல்வித்தகுதி Computer Science, Industrial Engineering, Management அல்லது Business Administrationபோன்ற ஏதேனும் ஒன்றில் பட்டம். மேலும் SemiConductor உற்பத்தி நிறுவனத்தில் 1-3 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் தேவை. மேலும் தகவல்களுக்கு https://www.careerjet.sg/jobad/sgdc21f27a020e6322b440656a86b079bc
- Software Engineer: ஏற்கனவே உள்ள மென்பொருள்களில் தேவையான மாற்றங்களை செய்வது. மென்பொருள்களை உருவாக்குவது மேலும் அதனை தொடர் சோதனைக்கு உட்படுத்தி அதன் செயல் திறனை மேம்படுத்துவது போன்றவை இந்த வேலையின் முக்கிய பொறுப்பாகும். இதற்கான கல்வித்தகுதி ஒரு பட்டம் மற்றும் Java, Python, HTML மற்றும் SQL போன்றவற்றைக் குறித்த புரிதல். மேலும் அறிந்துகொள்ள https://www.careerjet.sg/jobad/sgfa5ac2e02341f6139941feb9f5cdfa3f என்ற இணையத்தைப் பார்வையிடவும்.
- Product Test Engineer: புதியதாக உருவாக்கப்பட்ட Product-களை தொடர் சோதனை செய்வதன் மூலம் அதில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அதனை Product team-இடம் கூறி சரி செய்வதே இந்த பணியின் முக்கியக் கடமை. இதற்கான கல்வித்தகுதி Diploma in Electrical / Electronics / Mechatronics / Mechanical Engineering. மேலும் 0-5 வருட அனுபவம். மேலும் தகவல்களுக்கு https://www.careerjet.sg/jobad/sgdbbe2f25a365fdebba27a87e63b75a09 என்ற இணையத்தைப் பார்வையிடவும்.
- Product Engineer: நிறுவனத்தின் முக்கிய Product-ஆன automotive microcontrollers-களை தேவைக்கு ஏற்ப டிசைன் செய்வது அதில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, அதனை தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதனை மேம்படுத்துவது போன்றவை இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும். இதற்கான கல்வித்தகுதி Electrical Engineering, Computer Engineering, or Physics போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம். மேலும் தகவல்களுக்கு: https://www.careerjet.sg/jobad/sgea9e3c483a426455c06d3ac092d05e93
மேலே கொடுக்கப்பட்டது தவிர இன்னும் ஏராளமான வேலை வாய்ப்புகள் infineon நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை வாய்ப்புகளைக் குறித்து அறிந்துகொள்ள Jobssg இணையத்தைப் பார்வையிடவும்.
- அங்கே சென்று infineon என்ற நிறுவனத்தின் பெயரை Search Box-ல் உள்ளிடவும்.
- பின்னர் infineon நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவல்கள் கொடுக்கப்படும்.
- மேலும் உங்கள் வேலையை தேர்ந்தெடுத்து அங்கு உள்ள Apply Now என்ற பொத்தானை அழுத்தி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
- இதற்க்கு முன் உங்களுக்கான Profile Jobssg இணையத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லயென்றால் புதியதாக உருவாக்கிய பின்னர் apply செய்யவும்.
இந்த வேலை வாய்ப்பு அறிவிப்புகள் infineon நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்திலும் உள்ளது.
infineon.com என்ற இணையத்தைப் பார்வையிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள career என்ற தேர்வைக் க்ளிக் செய்யவும்.
- பின்னர் அங்கே உள்ள job search-ல் பல தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
நாடு, வேலை, பிரிவு என அனைத்தையும் தேர்ந்தெடுத்தால் கீழே அதனைக் குறித்த வேலை வாய்ப்பு தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். - அதனை படித்த பின்னர் அங்கு உள்ள apply now என்ற பொத்தானை அழுத்தி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கு விண்ணப்பிக்கும்பொழுது உங்கள் வேலை, அதன் கடமை மற்றும் நிறுவனம் போன்றவற்றைக் குறித்து நன்கு அறிந்துகொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். எப்படி சரியான முறையில் வேலைக்கு விண்ணப்பிப்பது என்ற வழிமுறை நமது தமிழ்சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்தி மேலும் விரிவாக அறிந்துகொள்ளுங்கள்.
https://tamilsaaga.com/news/how-to-apply-for-a-job-effectively/