TamilSaaga

போக்குவரத்து தொடர்பான குற்றங்கள் – நடைமுறைக்கு வரும் புதிய தண்டனைகள்

சிங்கப்பூரில் சாலைகளில் மற்றும் பிற இடங்களில் சட்டவிரோதமாக வாகன பந்தயங்கள் மற்றும் மேலும் பல போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தண்டனையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் சாலை போக்குவரத்து சட்டத்தில் அது குறித்த மாற்றங்கள் சென்ற ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரம்புக்கு மீறி வேகமாக வாகனத்தை இயக்குபவர்கள், ஆபத்தான வகையில் வாகனத்தை செலுத்துவோருக்கு அபராதமும் சிறை தண்டனை காலமும் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்முறை இதுபோன்ற குற்றம் புரிவோருக்கு ஓர் ஆண்டு வரையிலான சிறை தண்டனையும் 5,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இரண்டாம் முறை மீண்டும் அதே குற்றத்தை புரிவோருக்கு 2 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் சுமார் 10,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இனி சட்டவிரோதமாக குறிப்பிடப்பட்டுள்ள வேகா அளவினை தாண்டி பயணம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுன். ஆனால் அந்த சம்பவம் தொடர்பிலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து ரீதியாக எந்த குற்றம் புரிந்தவராக இருப்பினும் அவர்களுக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts