TamilSaaga

“சிங்கப்பூரில் Incentiveஐ இழக்கும் தொழிலாளர்கள்” : ஜனாதிபதி ஹலீமாவின் கடும் காட்டமான பதிவு – என்ன நடந்தது?

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், சுகாதார நெருக்கடியின் போது ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறி, தொழிலாளர்களின் வருகைப் படியை முதலாளிகள் பறிக்கும் நடைமுறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் தாறுமாறாக தாக்கிக்கொண்ட பள்ளி மாணவிகள்” – என்ன நடவடிக்கை மேற்கொண்டது கல்வி அமைச்சகம்?

சிங்கப்பூரில் சமீபத்தில் ஒரு Pest Control தொழில்நுட்ப வல்லுனருக்கு சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொழிலாளி உடல் நிலை சரியில்லாத நிலையிலும் 100 டாலர் Incentive பெற விரும்பி விடுப்பு எடுக்காமல் பணிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. A Rahim M Taha என்ற அந்த 60 வயது நபர், கடந்த அக்டோபர் 2020ல் கடுமையான இருமல் காரணமாக மருத்துவரைச் சந்தித்துள்ளார். ஆனால் அவர் எடுக்கச் சொல்லப்பட்ட ஸ்வாப் பரிசோதனை மற்றும் மருத்துவ விடுப்பு ஆகியவற்றை அவர் மறுத்துவிட்டார்.

அவர் பணிக்கு செல்லவில்லை என்றால் தனது நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் S$100 வேலை ஊக்கத்தொகையை இழக்க நேரிடும் என்று மருத்துவரிடம் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் குழு மேற்பார்வையாளராக S$1,500 அடிப்படை சம்பளத்தை பெற்று வருகின்றார். மேலும் கூடுதல் S$100 என்பது அந்த மாதத்திற்கான அவரது வீட்டு ஊதியத்தில் கணிசமான 7 சதவீத அதிகரிப்பாகும். மருத்துவரிடம் சென்று அவர் அடுத்த நாள் வேலைக்குச் சென்றார், ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஐந்து இடங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் தனது வேனில் சக ஊழியர்களுடன் மதிய உணவையும் சாப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஹலிமா வெளியிட்ட பதிவில் “அந்த மனிதனின் செயல் சந்தேகத்திற்கு இடமின்றி பொறுப்பற்றது என்றார், ஏனெனில் அவர் நேர்மறையாக இருந்தால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படலாம்” என்று அவர் கூறினார். அதே நேரத்தில் அந்த மனிதனின் அவருடைய குடும்பத்திற்கு உணவளிக்க அந்த 100 டாலர் என்பது பெரிய தொகை ஆதலால் அவர் அப்படி செய்துள்ளார் என்றும் கூறினார். “நோய்வாய்ப்பட்டாலும் தொழிலாளர்களை வேலை செய்ய தூண்டுவது ஆபத்தானது, ஏனெனில் அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்”, என்று அவர் மேலும் கூறினார்.

இதையும் படியுங்கள் : தென் கிழக்கு ஆசியாவை குறிவைக்கும் சிங்கப்பூரின் “வர்த்தகப் புலி” – பெரும் சக்தி வாய்ந்த வங்கியாக உருவெடுக்கும் UOB

மேலும் அவர் பேசுகையில் “அத்தகைய வருகை கொடுப்பனவை செலுத்தும் நிறுவனங்களுக்கு, தங்கள் ஊழியர்கள் உண்மையில் உடல் உபாதைகளுக்கு ஆளாகும்போது அவற்றை அளிக்க ஆவணம் செய்யவேண்டும் என்றும். அதே போல போலியாக அதை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். “முதலாளிகள் இதை தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts