TamilSaaga

சிங்கப்பூரில் 154 நிறுவனங்களில் அதிரடி சோதனை.. இரண்டு மசாஜ், பொழுதுபோக்கு நிலையம் மூடல் – அதிகரிக்கும் போலீஸ் ரெய்டு

கடந்த ஒரு வாரத்தில் உரிமம் பெறாத கேடிவி கடைகள் உட்பட 154 நிறுவனங்களில் சிங்கப்பூர் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் மசாஜ் நிறுவனங்கள் மற்றும் 78 பொது பொழுதுபோக்கு நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து 84 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு வெளிவந்த ஒரு அறிக்கையில் வடக்கு பிரிட்ஜ் சாலை, அவுட்ராம் சாலை, கல்லாங் அவென்யூ, உபி சாலை 1 மற்றும் கெய்லாங் லோரோங் 13 ஆகிய இடங்களில் உரிமம் பெறாத கேடிவி போன்ற பல கடைகளில் சோதனை நடத்தியதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர்.

2020 ஆம் ஆண்டு கோவிட் -19 விதிமுறைகள் மீறல்களுக்காக இப்போது விசாரணை நடத்தப்படும் 50 பேரை இந்த சோதனையின் போது வளாகத்தில் கண்டுபிடித்தனர். இவர்களில், 24 முதல் 46 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் உரிமம் பெறாத பொது பொழுதுபோக்கு நிலையங்களை நிர்வகித்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

15 மசாஜ் நிறுவனங்கள், மசாஜ் நிறுவனங்கள் சட்டம் மற்றும் கோவிட் -19 விதிமுறைகள் 2020-ன் கீழ் பல்வேறு விதி மீறல்களைச் போலீசார் தெரிவித்தனர். மேலும் இரண்டு வளாகங்களில் முகமூடி அணியாத மசாஜ் மற்றும் வாடிக்கையாளர்களை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த இரண்டு இடங்களும் 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது மற்றும் தலா $ 1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மீறியதற்காக $ 300 அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உரிமம் இல்லாமல் மசாஜ் நிறுவனத்தில் மசாஜ் சேவைகளை வழங்குவோருக்கு $ 10,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும். கோவிட் -19 விதிமுறைகள் 2020-ன் கீழ் பாதுகாப்பான நடவடிக்கைகளை கடைபிடிக்காத குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை, $ 10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாமல் மதுபானம் வழங்குதல் மற்றும் பொது பொழுதுபோக்கு வழங்குதல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகள் ஒவ்வொரு குற்றத்திற்கும் $ 20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.

Related posts