TamilSaaga

சிங்கப்பூரின் தடுப்பூசி பயணிப்பதை : குழப்பத்தை ஏற்படுத்தியதா மின்னஞ்சல்? – மன்னிப்பு கேட்டது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) கடந்த செவ்வாயன்று (நவம்பர் 23) மலேசியாவுக்கான தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) விமானங்களில் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் தேவைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட மின்னஞ்சலால் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளது. VTL ஏற்பாட்டின் கீழ், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சிங்கப்பூர் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதே புதிய நடவடிக்கை.

இதையும் படியுங்கள் : VTPக்கு “Apply” செய்வது எப்படி? – Detailed Report

ஆனால், வரும் நவம்பர் 29 அன்று மலேசியாவிற்கு VTL விமானங்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு செவ்வாய்க் கிழமை காலை பெருந்தொற்று சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் தேவைகள் பற்றிய மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. மேலும் பயண ஆலோசனைகளில் “மாற்றங்கள்” ஏற்பட்டுள்ளதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயணிகள் தங்கள் சொந்த செலவில் நுழையும் முதல் முனையத்தில் ஏழு அல்லது 10 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்” என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமைப்படுத்தலுக்கான ஒப்புதல் கடிதம் அல்லது லங்காவிக்கு பயணிக்கும் முழு தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு இந்த தேவை பொருந்தாது என்றும் அது கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இதனையடுத்து “தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள் உட்பட மின்னஞ்சலில் சுட்டிக்காட்டப்பட்ட மாற்றங்கள் VTL அல்லாத விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்” என்று SIA செய்தித் தொடர்பாளர் கூறினார். “குழப்பம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

Related posts