TamilSaaga

“புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாராந்திர சமூக வருகைக்கான “Pilot” திட்டம் தொடரும்” – அமைச்சர் டான் சீ லெங்

சிங்கப்பூரில் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பெருந்தொற்று நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் மருத்துவ கவனிப்பு தேவைப்படுவோர் மீது கவனம் செலுத்துவதற்காக திருத்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சரிசெய்யப்பட்ட நடவடிக்கைகள் பரந்த சமூகத்திற்கான தற்போதைய சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப உள்ளன.

மேலும் இது தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலைக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று MOM நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 2) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அதே நாளில் பல அமைச்சக பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், கடந்த சில நாட்களில் தங்குமிடங்களில் ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வருவதாக குறிப்பிட்டார்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் மிகவும் லேசான அல்லது எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். அதேபோல பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அல்லது ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் நிலையில் இல்லை
என்றும் அவர் கூறினார் மாறாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான தங்குமிட குடியிருப்பாளர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதால், அவர்கள் மிக விரைவாக மீட்க முடிந்தது என்று கூறினார்.

500 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாராந்திர சமூக வருகைக்கான தற்போதைய பைலட் திட்டம் தொடரும் என்றும் டாக்டர் டான் கூறினார்.

Related posts