TamilSaaga

சுற்றுலா பயணிகளுக்கு பச்சைக்கொடி… பஹ்ரைன் மக்களுக்கு அனுமதி – பிரான்சு அரசு விதிமுறைகள் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பஹ்ரைன் நாட்டிற்கு பச்சை கொடி காட்டியுள்ளது பிரான்சு.

பஹ்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவர்கள் தங்களின் தடுப்பூசி போடப்பட்ட நிலைக்கான சான்றிதழையும் கொண்டிருந்தால் அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சான்றிதழ்களுடன் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழும், தொற்று அறிகுறிகள் மற்றும் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இல்லை என்ற முடிவு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

தடுப்பூசி போடப்படவில்லை என்றாலோ அல்லது ஐரோப்பிய மருந்து நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நபர்களாக இருந்தால் அவர்கள் தங்களின் போக்குவரத்து நிறுவனத்திடமும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடமும் 11 நாட்கள் முதல் 6 மாதத்திற்குள்ளான மீட்பு சான்றிதழை வழங்க வேண்டும்.

மேலும் பயணத்துக்கு புறப்படுவதற்கு முன்பாக 72 மணி நேரம் முன்பு PCR பரிசோதனை செய்து கொரோனா நெகட்டீவ் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.

Related posts