TamilSaaga

Nurse to Army.. தனது சிங்கப்பூர் படைப்பிரிவின் ஒரே பெண் பயிற்சியாளர் – ஐஸ்வரிய வேதகியின் வெற்றி

சிங்கப்பூரில் கடந்த காலங்களில் செவிலியராக பணியாற்றி வந்த பெண் தனது முயற்சியால் தற்போது இராணுவ நிபுணராக உயர்ந்துள்ளார்.

முன்னாள் செவிலியர் ஒருவர் 1,139 SAF சிறப்பு கேடட் இராணுவ நிபுணர் பட்டதாரிகளில் ஒருவராக மாறியுள்ளார்.

ஒரு நர்ஸ் தற்போது இராணுவ பயிற்சி நிபுணராக மாறியுள்ளார். ஐஸ்வரிய நேதகி ஒரு தொழில் மாற்றம் தேவை என்று முடிவு செய்து கடந்த ஆண்டு தனது முயற்சியை துவங்கி தற்போது வென்றுள்ளார்.

அவர் தனது படைப்பிரிவில் உள்ள ஒரே பெண் பயிற்சியாளராக மாறியுள்ளார். தடகளமற்றவர் என்று கூறிக்கொள்ளும் அவர் தனது தனிப்பட்ட உடல் திறன் தேர்வுக்காக (IPPT) ஒரு தங்கத்தையும் வென்றார்.

“முழுப் பாடப்பிரிவிலும், படைப்பிரிவிலும் ஒரே பெண் என்ற முறையில், அனைவரும் செய்த அனைத்தையும் என்னால் முடிந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.

Photo credit : MINDEF

Related posts