TamilSaaga

குழந்தை மனசு கொண்ட திருடன் போல.. சிங்கப்பூரில் பொம்மை கடையில் திருடிய “வினோத திருடன்” – CCTV காட்சிகளை வெளியிட்டு ஆளை தேடும் நிறுவனம்

சிங்கப்பூரில் உள்ள தாம்சன் பிளாசாவில் உள்ள ஒரு பொம்மைக் கடை, தங்கள் வளாகத்தில் இருந்து பொருட்களை திருடிச் சென்றதாக நம்பப்படும் ஒரு நபரைத் தேடி வருகிறது. பல்வேறு விளையாட்டு பொருட்கள், Lego பொம்மைகள் மற்றும் சிலைகளை விற்கும் நிறுவனம் தான் டாய் ஸ்டேஷன்.

கடந்த மே 10ம் தேதி அன்று காலை 10:52 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் டாய் ஸ்டேஷன் வெளியிட்ட CCTV காட்சிகளில், ஒரு நபர் கடையைச் சுற்றி நடப்பதையும் கடையில் உள்ள பொருட்களை கவனித்து செல்வதையும் பார்க்கமுடிகிறது.

அந்த நபர் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகளுக்கு முன்னால் முன்னும் பின்னுமாக நடக்கும்போது அங்கிருக்கும் ஊழியர்களை உன்னிப்பாகக் கவனித்து வருவது CCTV காட்சிகளில் தெளிவாக தெரிகின்றது.

ஆட்டய போட்ட திருடனின் வீடியோ

பின்னர் ஊழியர்கள் யாரும் கவனிக்காத நேரத்தில் அவர் அந்த அலமாரியில் இருந்து ஒரு பொருளை விரைவாக எடுத்துக்கொண்டு, உடனடியாக கடையை விட்டு வெளியேறுகிறார். டாய் ஸ்டேஷன் அளித்த தகவலின்படி, அந்த நபர் S$200 மதிப்புள்ள போகிமொன் அட்டைகளின் பெட்டியைத் திருடிவிட்டார் என்று கூறியது.

வெறும் 5 நிமிட கோளாறு.. அதுக்கே மன்னிப்பு கேட்ட SMRT.. “Perfection”-ல் மற்ற நாடுகளுக்கு Don-ஆக இருக்கும் சிங்கப்பூரில் இதுவரை இல்லாத சம்பவம்

அட திருடுவது இவ்வளவு ஈசியா என்று எண்ணி சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபர் திரும்பி கடைக்குள் வந்து, நேராக அதே அலமாரிக்குச் செல்கிறார். மீண்டும் மற்றொரு S$200 பெட்டியான போகிமொன் அட்டைகளை எடுத்துக்கொண்டு, மீண்டும் வெளியேறுகிறார்.

டாய் ஸ்டேஷன் கூறுகையில், அந்த நபர் எடுத்த பொருட்களை திருப்பித் தருமாறு “தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறோம்”, மேலும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது அந்த நிறுவனம்.

வெறும் 4 வெள்ளி செலவு செய்து நாலரை கோடி வென்ற தமிழக ஊழியர் – சிங்கப்பூரில் 4D லாட்டரியால் ஒரே இரவில் தலைகீழாய் மாறிய “Store Keeper” வாழ்க்கை

இல்லையேல் காவல்துறையில் புகார் அளித்து, தங்களிடம் உள்ள ஆதாரங்களை போலீசாரிடம் ஒப்படைப்போம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நபர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், அந்த கடை பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts