TamilSaaga

சிக்கனமாக சிங்கப்பூரில் குடும்பத்திற்காக வாழ்க்கையை ஓட்டும் தொழிலாளர்கள்… உண்மையில் சிங்கப்பூரில் இவ்வளவு கஷ்டமா?

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் பெரும்பாலான ஊழியர்கள் குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் தான். அதிலும் அவர்கள் பேருந்து கட்டணத்திலிருந்து சாப்பிடும் சாப்பாடு வரை அனைத்திலும் சிக்கனமாக இருந்தால் மட்டுமே குடும்பத்திற்கு ஓரளவுக்கு பணம் அனுப்ப முடியும். அப்படி இல்லையென்றால் அவர்கள் சம்பாதித்த மொத்த பணத்தையும் சிங்கப்பூரிலே செலவு செய்து விட்டு அங்கேயே இருக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.

அப்படி சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவில் பேருந்து வசதி கூட இல்லாததால் லாரியில் தங்கும் இடத்திற்கு செல்ல வேண்டிய கஷ்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். சிங்கப்பூரை பொறுத்தவரை தொழிலாளர்கள் லாரியில் பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் ஒரு சில பேருந்து வசதிகள் இல்லாத பட்சத்தில் டாக்ஸியில் செல்ல வேண்டுமானால் 10 வெள்ளிக்கும் அதிகமாக பணம் செலவாகும். அப்படி இருக்கும் பொழுது ஆயிரம் வெள்ளி சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளி ஒரு வேலைக்கு 10 வெள்ளி கொடுத்து எப்படி தங்கும் இடத்திற்கு செல்ல முடியும்.

எனவே அவர்கள் லாரியில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சிங்கப்பூரில் உள்ள கிராஞ்சி பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளது. பகுதிக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை இரவு 7:40 மணிக்கு. எனவே தமிழ்நாட்டு ஊழியர்கள் இரண்டு வெள்ளிக்கட்டி லாரியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக தங்களது கஷ்டத்தை கூறியுள்ளனர். களைப்பாக இருப்பதால் 5 கிலோ மீட்டர் தூரத்தை எங்களால் நடந்து கடக்க முடியாது என்பதால் லாரி பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். எனவே தொழிலாளர்களுக்கு பேருந்து சேவை கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தங்களது கஷ்டங்களை தெரிவித்துள்ளனர்.

Related posts