TamilSaaga

“மனிதர்களுக்கு ஏற்படும் அகால மரணம்” : நம்மை “அலெர்ட்” செய்யும் சில அறிகுறிகள் – இளைஞர்களே கவனம் தேவை!

தொடர்ச்சியாக மாறிக்கொண்டே வருகின்ற இந்த காலகட்டத்தில் மனிதன் ஆயுள் காலமும் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகின்றது என்றே கூறலாம். முன்பெல்லாம் 80ஐ தாண்டியவர்களை தான் சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் கண் சம்மந்தப்பட்ட நோய், இருதயம் சம்மந்தப்பட்ட நோய் ஆகியவை நெருங்கும். ஆனால் இந்த டிஜிட்டல் உலகில் மேற்குறிப்பிட்ட இந்த நோய்கள் வர வயது வரம்பு என்பதே இல்லை என்றால் கூறலாம். மாறிவிட்ட உணவு பழக்கமும் உடல் உழைப்புமே இதற்கு முக்கிய காரணிகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

சிங்கப்பூர்.. அதிகாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ : இரு பெண்கள் மருத்துவமனையில் – 73 வயது முதியவர் கைது – ஏன்?

ஆனால் தற்போது இதுகுறித்த ஆராய்ச்சி ஒன்று நடந்துள்ளது, இதில் மனிதனின் அகால மரணத்திற்கு எந்தெந்த காரணங்கள் வழி வகுக்கின்றது என்பதை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். Journal of Gerontology : Medical Science வெளியிட்ட ஆய்வின் முடிவில் மனதளவில் உள்ள இறுக்கம் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு என்பது ஒரு தனிநபரின் ஆரம்ப கால மரணத்தை குறிக்கும் என்ற ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 2000-க்கும் அதிகமாக மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இறப்புக்கான காரணிகளில் வயது முதிர்வு, நாள்பட்ட நோய் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த நிலையில் மனசோர்வு என்பது முதலிடம் பிடித்துள்ளது.

அய்யயோ! எனக்கு மனசோர்வு நிறைய இருக்கு என்று படிப்பவர்கள் யாரும் கவலைகொள்ளவேண்டாம், இந்த மனித உடல் என்பது உலகத்தில் இதுவரை எந்தவித விஞ்ஞானிகளாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு அற்புத இயந்திரம். தன்னை தானே சரிசெய்துகொள்ளும் திறன் மனிதர்களாகிய நமது உடலுக்கு உண்டு. முன்பெல்லாம் பல கிலோமீட்டர் நடந்து சென்று படித்தோம். அப்பா ஓட்டிய சைக்கிள் தான் நமக்கு இருந்த ஒரே வாகனம். ஆனால் இன்று அருகில் இருக்கும் கடைக்கு செல்லவேண்டும் என்றாலும் உடனே பைக் சாவியை தேடுகிறோம்.

“சிங்கப்பூரில் நெருங்கிவரும் சீன புத்தாண்டு” : போக்குவரத்தில் மாற்றம் இருக்குமா? – புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

மருத்துவர்கள் சொல்வதும் இதுதான் குறிப்பாக மேற்குறிப்பிட்ட அந்த ஆய்வினை நடத்திய தொற்று நோயியல் துரையின் இணைப்பேராசிரியர் W.Clean கூறுவதும் இதுதான். உடல் உழைப்பு, நமது மனதில் ஏற்பட்ட சோர்வை குறைக்க 100 சதவிகிதம் உதவுவது உடல் உழைப்பு தான். எனக்கு லேப்டாப்பில் தான் வேலை என்று ஆகிவிட்ட காலம் தான். ஆனாலும் காலரா தினமும் சில மணி நேரம் நனடந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். துரித உணவுகளை தவிருங்கள், சுவையான இயற்கை உணவு என்பது உலகெங்கும் கொட்டிக்கிடக்கிறது. அதை தவறாமல் உண்ணுங்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts