TamilSaaga

Exclusive : உங்கள் வெளிநாட்டு வருமானம்.. வரவு, செலவு, முதலீடு எவ்வாறு கணக்கிட்டு செயல்படுவது? – ஓர் சிறப்பு பார்வை

வரவு, செலவு மற்றும் முதலீடு பற்றி நமது அடிப்படை அறிவை எந்த பள்ளி, கல்லுரிகளும் சொல்லித்தருவதில்லை. மாறாக அதை நமது முன்னோர்கள் தந்த அனுபவத்தின் வழியாகத் தான் நமது பெற்றோர்கள் அதை தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தனர்.

வாழ்நாளின் கடைசி நொடி வரை செலவு இருக்கும் இந்த சூழ்நிலையில், வரவு என்பது ‘வரம்’ அந்த வரத்தை உழைப்பால் பெற்றவர்கள் வெளிநாடுவாழ் ஊழியர்கள் என்றால் அது மிகையல்ல. நிலை உணர்ந்து, நிலைமை உணர்ந்து உழைக்கும் உங்களிடம் உங்கள் வரவை பற்றிய விழிப்புணர்வு உள்ளதா ?

வரவு, என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. நேற்று உச்சத்தில் இருந்தவர்கள் இன்று காணாமல் போன கதைகளும் இங்குண்டு. அதே சமயம் வரவை பற்றிய அறிவை ஒரு நாளில் கற்றுக்கொள்ள முடியாது, வரவை பற்றிய அடிப்படை அறிவை தெரிந்தகொள்ள முயற்சி செய்யுங்கள்

வரவு..

வரவை பற்றிய தெளிவான அட்டவணை எடுத்து கொள்ளுங்கள்

வரவை பற்றி நாம் அட்டவணை செயல்படுத்தும்போது, நமது குடும்பம் உறுப்பினர்களின் உதவியும் தேவை, அதனால் உங்கள் அட்டவணை பற்றி தெளிவாக அவர்களிடம் எடுத்து கூறவும்.

செலவு..

வரவுக்கு மீறி செலவு இருக்கும் பட்சத்தில், செலவை குறைக்கவும் மற்றும் நமது வருமானத்தை கூட்டவும் முயற்சி செய்ய வேண்டும்.

நாம் என்னதான் அட்டவணை போட்டு, செலவு செய்தாலும் நமது அளவின்படி செலவு இருக்காது. செலவு என்பது அதிகமாகவே இருக்கும். அப்படி இருக்கும் படத்த்தில், உங்களால் முடிந்த 100% முயற்சியை மேற்கொள்ளுங்கள். மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் கட்டுக்குள் வரும் படி செலவு செய்யுங்கள்.

முதலீடு..

இதுதான் மிக மிக கவனம் செலுத்தவேண்டிய விஷயம். உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வது, முதலீடு செய்ய யார் ஆலோசனையை கேட்க வேண்டும், என்று பல விஷயங்களை நாம் ஆராய வேண்டும். சம்பாரிக்க தொடங்கிய முதல் ஆறு மாதங்கள் முதலீடு பற்றி நன்றாக சிந்தியுங்கள்.

பின்னர் சிறிய அளவில் முதலீடு செய்து அதை பற்றி புரிந்துகொள்ளுங்கள். இதன் அடிப்படையை வைத்து பெரிய அளவில் முதலீடு செய்யுங்கள்.

சேமிப்பு.

இந்த பதிவின் உயிர்நாடி இதுவென்றால் அதுமிகையல்ல. பொதுவாகவே நாம் எவ்வளவு சம்பாதித்தாலும், செலவு செய்தாலும் சேமிப்பு என்பது இல்லையென்றால் நமது எதிர்காலம் என்பது கேள்விக்குறியே.

பொருளியல் அறிஞர்களின் கூற்றுப்படி சேமிப்பு என்பது ஒரே இடத்தில் இருக்க கூடாது என்று கூறுகின்றனர். உதாரணமாக சிங்கப்பூரில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் பட்சத்தில் அதில் சரிபாதியை நீங்கள் சேமிப்புகளாக மாற்றவேண்டும்.

அதிலும் அந்த பாதித்தொகையை நிலம், தங்கம் என்று பல பாகங்களாக பிரித்து நீங்கள் அவற்றை சேமித்து வைக்கவேண்டும். இல்லை, என்னால் எனது சம்பளத்தில் இருந்து 50 சதவிகிதத்தை சேமிக்க முடியாது என்று நீங்கள் நினைக்கும்பட்சத்தில், பொருளியல் அறிஞர்களின் அறிவுரைப்படி மாதம் 5 சதவிகிதம் என்று உங்கள் சம்பளத்தில் இருந்து ஒதுக்கி அதை சேமிக்க தொடங்குங்கள். நிச்சயம் அது மாதம்தோறும் படிப்படியாக உயரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தை அளவோடு செலவிட்டு சிறப்பாக சேமித்து வந்தால் நிச்சயம் உங்கள் எதிர்காலம் வளமோடு இருக்கும்.

Related posts