TamilSaaga

Exclusive : சிங்கப்பூரில் 100 நாட்களுக்கு முன் காணாமல் போன தமிழக தொழிலாளி வரதராஜன் – கண்டுபிடித்துத் தர “தமிழ் சாகாவிடம்” வேண்டுகோள் விடுத்த தங்கையின் கணவர்

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழக தொழிலாளி வரதராஜன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி காணாமல் போனார். அவர் காணாமல்போய் சுமார் 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் பரிதவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் வரதராஜனின் அவரது குடும்பத்தினர் சிங்கப்பூர் மற்றும் தமிழக அரசுகளின் உதவிகளை நாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் பள்ளி விடுமுறையின் போதுதான் நடக்கிறது : சிங்கப்பூரில் மர்மமான முறையில் உடைக்கப்படும் ஜன்னல்கள் – மக்களே உஷார்!

இந்நிலையில் காணாமல்போன வரதராஜன் அவர்களுடைய தங்கையின் கணவர் ரகுநாத் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக தகவலின் அடிப்படையில் இந்த பதிவு வெளியிடப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் ராஜமாணிக்கம் இவருடைய மகன் தான் வரதராஜன் தற்போது அவருக்கு வயது 28. சுமார் ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனது குடும்பத்திற்காக உழைத்து வரும் வரதராஜன் சிங்கப்பூரில் சுங்கம்கடு என்ற பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் JCB ஆப்ரேட்டராக பணி செய்து வருகின்றார்.

சிங்கப்பூரில் தற்போது உள்ள கட்டுப்பாடுகளின்படி டார்மிட்டரியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் வேலைசெய்யும் நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற்று 8 மணி நேரம் வெளியில் சென்றுவர அனுமதி உண்டு. இதேபோலத்தான் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி நிறுவனத்தின் அனுமதியை பெற்று தனக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வரதராஜன் பஜாருக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு வரதராஜன் தான் தங்கியிருந்த டார்மிட்டரிக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் வரதராஜன் காணாமல் போன பிறகு சிங்கப்பூர் கேரளாங்கு பகுதியில் பணி செய்துவரும் வரதராஜனின் அண்ணன் கோவிந்தராசுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தம்பியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவருடைய இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. எந்தவித தகவலும் கிடைக்காமல் சுமார் ஒரு வாரமாக தம்பியை தேடிய கோவிந்தராசு இறுதியில் தமிழகத்தில் உள்ள தனது குடும்பத்திற்கு தகவலை அனுப்பினார்.

செய்தி கேட்டு அதிர்ந்துபோன வரதராஜனின் தாய் மற்றும் அவர் தங்கையின் கணவர் ரகுநாத் ஆகிய இருவரும் இணைந்து சென்னைக்கு சென்று அங்கு உள்ள வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல சங்கத்தில் தகவல் அளித்தனர். முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து வரதராஜனை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

சிங்கப்பூர்.. பணியிடத்தில் நடந்த விபத்தால் சக்கர நாற்காலியில் முடங்கிய வாழ்க்கை – நல்ல உள்ளங்களின் உதவியோடு பங்குனி உத்திரத்தில் பங்கேற்ற மாரிமுத்து

சிங்கப்பூரில் சுமார் 100 நாட்களுக்கு முன்பு காணாமல் போன தனது இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் அவருடைய மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. தன் மகனை விரைவில் கண்டுபிடித்து தருமாறு அவருடைய தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே சிங்கப்பூர் அரசும் தமிழக அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை விரைவில் மீட்க வேண்டும் என்று பலரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Related posts