TamilSaaga

சிங்கப்பூர் உணவு கடைகளின் வாடகை உயர்ந்துள்ளதா? தேசிய சுற்றுப்புற அமைப்பு விளக்கம்

சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள உணவு கடைகளின் வாடகை சுமார் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பல மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தன.

K.F.சீட்டோ எனும் உணவு விமர்சகர் “இந்த கொரோனா நெருக்கடியில் ஏன் உணவுக் கடைகளின் வாடகை உயர்த்தப்படுகிறது” என கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போது இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய சுற்றுப்புற அமைப்பு “உணவுக் கடைகளின் வாடகை சந்தை மதிப்பு அடிப்படையில் தான் நிர்ணயம் செய்து குத்தகை புதுப்பிக்கப்படுகிறது மேலும் போட்டியை பொருத்து வாடகை 1 டாலர் வரை இருக்கக்கூடும்” என்று கூறியுள்ளது.

ஒரே ஒரு கடையின் நிலையை எடுத்துக்கொண்டு உணவு விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாடகைத் தொகை அதிகரிப்பதை மட்டும் பார்ப்பது தவறான அணுகுமுறை. கடந்த காலங்களில் வாடகையானது 300 வெள்ளிகளுக்கு மேல் உயர்த்தப்படவில்லை என்றும் அதே தருணத்தில் மாத வாடகை 300 வெள்ளிக்கு மேல் குறைக்கப்பட்டு இருப்பதை அமைப்பு சுட்டிக்காட்டியது.

உணவுக்கடைகளில் கொரோனா தொற்று நெருக்கடியை சமாளிக்க மானியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மானியம் பெறாத கடைகளின் இடைநிலை மாத வாடகை 1250 வெள்ளி அளவில் உள்ளது என அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

Related posts