TamilSaaga

சிங்கப்பூரில் திறன் போட்டி – சிலம்பம் சுற்றி முதல் பரிசை தட்டிச்சென்ற ‘தமிழ் சிங்கம்’

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘chil பண்ணு மாப்பி’ என்னும் உள்ளூர் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 33 வயது கணேசன் என்ற இந்தியர் இந்த chil பண்ணு மாப்பி என்னும் திறன் போட்டியில் சிலம்பாட்டம் ஆடி முதல் பரிசான ஆயிரம் வெள்ளி பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணேசன் உருவாக்கிய சிலம்பாட்ட காணொளி டிக் டாக் செயலியில் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இவருடன் போட்டியிட்ட மற்ற 19 போட்டியாளர்களை விட அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளார் கணேசன்.

சிங்கப்பூரில் தற்போது வேலை செய்துவரும் கணேசன் ‘டேக்வாண்டோ’ என்ற தற்காப்பு கலையை பிறருக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். எதிர்காலத்தில் இந்தியாவில் தற்காப்பு பள்ளி ஒன்றை அமைப்பதே கணேசனின் கனவாக உள்ளது.

12 வயதிலிருந்தே கணேசன் தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

Related posts