TamilSaaga

‘பையன் சிங்கப்பூரில் இருக்காரா”?.. நம்பி பொண்ணு கொடுக்கலாம்.. ஓஹோனு வாழலைன்னாலும் எம் பொண்ணு கஷ்டப்பட மாட்டா! பெண் வீட்டார் மத்தியில் இருக்கும் அசாத்திய “நம்பிக்கை”!

தமிழகத்தில் இன்னமும் கிராமப் பகுதிகளில், தங்கள் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடும் படலத்தில், அதிக அளவிலான பெண் வீட்டார் கேட்கும் கேள்வி இது ஒன்று தான்..

‘பையன் வெளிநாட்டில் வேலை பார்க்குறாரா?’

இந்த கேள்விக்கான மதிப்பு மிக அதிகம்.. என் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான் என்று சொல்வதை பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். ஏனெனில், அப்போது தான் நல்ல சம்பந்தத்தில் இருந்து பெண் கொடுக்க முன்வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக சிங்கப்பூரில் இருக்கும் பசங்களுக்கு எப்போது தனி கிராக்கி உண்டு. காரணம் இல்லாமல் இல்லை. வேலை, சம்பளம், நல்ல வாழ்க்கை, செட்டில்மெண்ட் என்று அனைத்துக்கும் கியாரண்டி கொடுக்கும் நாடாக சிங்கப்பூர் உள்ளது.

“சிங்கப்பூரில் வேலைபார்க்குற பையனுக்கு நம்ம பெண்ணை கட்டிக் கொடுத்தா, அவ வாழ்க்கை கண்டிப்பா ஓரளவுக்காவது நல்லா இருக்கும்.. ஓஹோனு வசதி வாழலை-ன்னாலும் கண்டிப்பா கஷ்டப்பட மாட்டா” என்பதே, பெண் வீட்டார் பெருசுகள் பெண்ணைப் பெற்றவர்களை கன்வின்ஸ் செய்யும் வார்த்தைகளாக இருக்கும்.

“இந்தாரும்மா.. பையன் சிங்கப்பூருல வேலை பார்க்கணுமே-னு யோசிக்காத.. அங்க வேலை பார்க்குற பையனாலதான் உன்னை நல்லபடியா வச்சுக்க முடியும். நீயும் யாரையும் எதிர்பார்க்காம வசதியா வாழ முடியும்” என்று பெண்ணையும் இப்படித் தான் கன்வின்ஸ் செய்வார்கள்.

மேலும் படிக்க – வெளிநாட்டு ஊழியர்கள் + சிங்கப்பூரர்கள்.. இரு தரப்புக்கும் சேர்த்து விபூதி அடித்த “அதிபுத்திசாலிகள்” – இவர்கள் மூலம் சிங்கை வந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு “மெகா தண்டனை”!

அதுமட்டுமின்றி, பொதுவாக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் ஆண்களிடம் உள்ள ஒரு குவாலிட்டி என்ன தெரியுமா? அவர்கள் அதிக வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதால், இயற்கையாகவே அவர்கள் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பல நாள் ஏக்கம் காரணமாக, குடும்பம் மீதான பற்றுதல்அவர்களிடம் இயற்கையாகவே அதிகமாக இருக்கும்.

அப்படிப்பட்ட மனதுள்ளவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்? வரப் போற மனைவியை எப்படி பார்த்துக் கொள்வார்கள் என்பதே யோசித்துப் பாருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிங்கப்பூர் என்றும் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க தவறியதே இல்லை. உண்மையாக உழைப்பவர்கள் இங்கே படிப்படியாக உயர்ந்து கொண்டே இருப்பர்கள். அவர்களிடம் படிப்பு இல்லையென்றாலும், நல்ல வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை என்று யாருமே எதிர்பார்க்காத ஒரு உயரத்தில் இருப்பார்கள்.

பெண்ணைப் பெற்றவர்கள் சிங்கப்பூரில் பணிபுரியும் வரன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம் தான். மற்ற நாடுகளில் என்னதான் வருமானம் இருந்தாலும், சிங்கப்பூர் அளவுக்கு வர முடியாது என்பதே உண்மை. அதுக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என்று பட்டியலை எடுத்து நீட்டக் கூடாது.

மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்துவிட்டு பார்க்கும் பொழுது, சிங்கப்பூரில் வேலைப்பார்ப்பவர்களால் தான் பெரியளவு வருமானம் ஈட்ட முடியும் என் என்பதே உண்மை.

அதேசமயம், விரக்தியின் உச்சத்தில் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அட போங்கப்பா.. 8 வருஷமா சிங்கப்பூரில் வேலை பார்க்குறேன்.. இன்னும் பொண்ணு அமையல என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். என்ன செய்வது!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts