TamilSaaga

14 ஆண்டுகள்.. நினைத்தபோதெல்லாம் மகள்களை சீரழித்த தந்தை (அரக்கன்) : வழக்கை கண்டு அதிர்ந்த நீதிபதி – தோலை உரிக்க காத்திருக்கும் சிங்கப்பூர் போலீஸ்

சிங்கப்பூரில் 14 வயதுக்கு மேற்பட்ட தனது நான்கு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவருக்கு இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 18) 33 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 24 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி டான் சியோங் தை தனது தீர்ப்பை வழங்குகையில், அந்த மனிதனின் செயல் “கொடூரமானது” என்றும் இதுவரை சிங்கப்பூரில் பதிவான “கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இது ஒரு கொடூரமான வழக்கு என்றும் கூறினார்.

மரணத்தின் எல்லைக்கே சென்ற ரஜினிகாந்த்… கடைசி நேரத்தில் உயிரைக் காப்பாற்றி.. மரணக் கணக்கை திருத்தி எழுதிய சிங்கப்பூர் “மவுண்ட் எலிசபெத்” மருத்துவமனை

தற்போது 45 வயதாகும் அந்த கொடூரன் கடந்த 2004 மற்றும் 2018ம் ஆண்டுக்கு இடையில் பலமுறை அந்த நான்கு பெண் பிள்ளைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டும் இல்லாமல், அவனுக்கு அந்த சிறுமிகள் மீது கோவம் வரும்போதெல்லாம் பலமுறை அந்த பிஞ்சுகளை பட்டினி போட்டுள்ளேன். கற்பழிப்பு, மோசமான பாலியல் வன்கொடுமை, குழந்தையை மோசமாக நடத்துதல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் அவன் மீது சுமத்தப்பட்ட 7 குற்றங்களை ஒப்புக்கொண்டான். மேலும் 26 குற்றங்கள் அவனது தீர்ப்பின்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி டான் கூறுகையில், தனது மூத்த மகளுக்கு ஆறு முதல் ஏழு வயது இருக்கும்போதே தனது குழந்தைகளை பாலியல் ரீதியாக அணுக அந்த நபர் துவங்கியுள்ளார் என்றார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு குழந்தைகளுக்கான Adventure Campல் பயிற்றுவிப்பாளராக இருந்தார் என்று நீதிமன்றம் கூறியது. 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த தம்பதியருக்கு தற்போது 12,18 மற்றும் 19 வயதுள்ள மூன்று பெண் குழந்தைகள் மற்றும் 15 வயதுடைய ஒரு ஆண் குழந்தை உள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முந்தைய திருமணத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர் அதில் மகளுக்கு இப்போது 24 மற்றும் அவரது மகனுக்கு 23 வயது.
.
அந்த நபரால் பாதிக்கப்பட்ட முதல் பெண் குளத்தை பிரைமரி 5ல் படித்துவந்தபோதே அந்த சிறுமியை பாலியல் ரீதியாக அணுக துவங்கியுள்ளான். மேலும் 2016ல், அந்த சிறுமியை தனது அறைக்கு அழைத்து ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் செயல்களில் ஈடுபடும் ஆபாச வீடியோவைக் காட்டி, வீடியோவில் உள்ள சிறுமி உன்னைப்போல Primary 5ல் படிப்பவள் என்றும் அந்த ஆண் அவளுடைய தந்தை என்று கூறியுள்ளான்.

அதன்பிறகு அந்த நபர் தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கி 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளான். ஒருகட்டத்தில் நீ என்னுடன் மாதம் ஒருமுறை உறவுகொள்ளவில்லை என்றால் நீ படிக்க பள்ளிக்கு செல்லமுடியாது என்றும் கூறியுள்ளான் அந்த கொடூரன்.

படிப்பை நினைத்து பயந்த அந்த பிள்ளையும் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார், 2018ம் ஆண்டு அந்த கொடூரன் மீண்டும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்யும்போது வலியால் துடித்தபோதும் அவன் அவளை நாசம் செய்வதை நிறுத்தவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. இதுஒருபுரம் இருக்க பாதிக்கப்பட்ட அந்த முதல் சிறுமியோடு சேர்த்து மற்ற இரண்டு சிறுமிகளின் ஆடைகளை அவ்வப்போது அவிழ்க்கச்சொல்லி அவர்களது உடலை சோதனையிட்டுள்ளான் அந்த மனித மிருகம். அடிக்கடி அந்த மூன்று சிறுமிகளை ஆடையின்றி பார்க்க விருப்பப்பட்டு இந்த கொடூர செய்லகளை அந்த சிறுமிகளின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் அரங்கேற்றியுள்ளான்.

2 வருடங்களுக்கு பிறகு… வெகு விமர்சையாக பங்குனி உத்திரத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் – பொதுமக்கள் எந்த நேரத்தில் செல்லலாம்?

மேலும் அந்த சிறுமிகள் மீது கோவம் வரும்போதெல்லாம் அவர்களை பட்டினிபோட்டும் கொடுமை செய்துள்ளான். இதனால் அவன் காம இச்சைகளுக்கு விருந்தானா சிறுமிகள் பல நாட்கள் பசியில் உறங்கச்சென்ற கொடுமையும் நடந்துள்ளது. இதை கேட்கும்போதே இப்படிக்கூட ஒரு தந்தை இருப்பானா என்று நம் நெஞ்சங்கள் பதறுகிறது. இறுதியாக ஒரு நாள் இரவு அந்த இரண்டு சிறுமிகள் குப்பைகளை வெளியில் கொட்டுவதுபோல சென்று தங்களுடைய ஆண் நண்பர்கள் உதவியால் போலீசில் புகார் அளிக்க அவன் கொடுமைகள் கண்டறியப்பட்டது.

தற்போது அந்த மனித மிருகத்திற்கு நீதிமன்றம் 33 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 24 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts