TamilSaaga

சிங்கப்பூரில் வேலைப்பார்த்த தமிழக ஊழியர்… சென்னையில் Media-வில் பணிபுரியும் பிரபலத்துடன் ஏடா கூட காதல்.. கட்டிய மனைவிக்கு துரோகம்.. இறுதியில் Compromise ஆகி போலீசாரை Comedian-ஆக்கிய பெண்!

இணையத்தில் மூழ்கி கிடப்பதும், அதில் அறிமுகமாகும் நபர்களிடம் நெருக்கமாக பழகுவதும் எந்த அளவிற்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நிரூபித்துள்ளது சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த ஒரு தமிழரின் வாழ்க்கை.

சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் தான் சுஜிதா. இணையத்தில் பல மணி நேரம் மூழ்கிக்கிடக்கும் சுஜிதா அடிக்கடி தனது Facebook நண்பர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் நமது சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த வேலூர் மாவட்டம் லத்தேரி என்ற ஊரை சேர்ந்த மனோஜ் குமார் என்பவருடன் Facebook Chat மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளார். நாளுக்கு நாள் இந்த உறவு வளர அது காதலாக மாறியுள்ளது.

ஆனால் மனோஜ் குமார் தனக்கு திருமணமானதை மறைத்து சுஜிதாவிடம் நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்காக தமிழகம் சென்ற மனோஜ்குமார் சுஜிதாவை நேரில் சந்தித்து தன் காதலை தெரிவித்துள்ளார். சுஜிதாவும் அவரை நம்பி மனோஜுடன் ஹோட்டல் அறையில் ரூம் எடுத்து தங்குவது, அவர் கூப்பிடும்போதெல்லாம் நேரில் சென்று சந்திப்பது என்று மிக நெருக்கமாக பழகியுள்ளார்.

சிங்கப்பூரின் TOTO Drawவின் அடுத்த குலுக்கல் எப்போது?.. குரூப் 1 பரிசு சுமார் S$10,00,000 – TOTOவில் மொத்தம் எத்தனை வகை பரிசு உள்ளது தெரியுமா?

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மனோஜிடம் சுஜிதா கேட்க அப்போது தான் தனக்கு திருமணமானதை மனோஜ் அவரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு சுஜிதாவிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இறுதியில் அவர் மீண்டும் சிங்கப்பூர் புறப்படப்போகிறார் என்பதை அறிந்துகொண்ட சுஜிதா வேலூர் காவல் நிலையத்தில் மனோஜ் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு போலீசார் துரிதமாக செயல்படவில்லை என்று கூறிய சுஜிதா கடைசியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தனித்து போராட துவங்கியுள்ளார். அதிகாரிகள் எவ்வளவோ சமாதாம் செய்தும் சுஜிதா மனம் மாறாத நிலையில் போலீசார் மனோஜ் குமாரை நேரத்தில் அழைத்து பேசியுள்ளனர்.

உடனே அங்கு நேரில் வந்த மனோஜ் குமார், தான் சுஜிதாவிற்கு நிறைய செலவு செய்திருப்பதாகவும், நடந்த அனைத்தும் அவருக்கு தெரிந்தே நடந்தது என்று கூற செய்தவறியது தவித்த போலீசார் இருவரையும் தனியே பேச அனுமதித்துள்ளனர்.

சில மணி நேரம் இருவரும் தனித்து பேசிய நிலையில் மனோஜ் குமார் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் இருவரும் சமரசம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார் சுஜிதா. இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல சுஜிதா தன்னுடன் பணியாற்றி வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் மீதும் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விடா முயற்சி.. குடும்பத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் உழைப்பு.. சிங்கப்பூரில் ஒவ்வொரு தமிழனுக்கும்… இன்று (ஜுலை.27) பெருமைத்தேடித் தந்த ஊழியர்… அரங்கம் அதிர விருது வென்ற தமிழன்!

சுஜிதா மற்றும் மனோஜ் குமாரின் வழக்கு சுமுகமாக முடிந்துவிட்டாலும் இவர்கள் இருவர் செய்த காறியதால் அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பமும் எவ்வளவு வேதனையை அடைந்திருப்பார்கள் என்பதை நாம் யோசித்துப்பார்க்கவேண்டும்.

மனோஜ் சிங்கையில் நல்ல வேலையில் இருந்தபோது, தேவையற்ற காதலால் அவர் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த சம்பவம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என்றபோது இன்றளவும் பிற நாடுகளுக்கு சென்று வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தை மட்டும் நினைவில் கொண்டு அவர்களுக்காக போராடி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமே அன்றி இதுபோன்ற இன்னல்களில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதை மீண்டும் நினைவூட்டவே இந்த பதிவு.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts