TamilSaaga

“வளர்ச்சி பாதையில் சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஏற்றுமதி” – எதிர்வரும் ஆண்டிலும் இது தொடருமா?

சிங்கப்பூருக்கான தெற்காசிய நாடுகளின் ஏற்றுமதி அளவு தற்போது உயர்ந்துள்ளது, கடந்த 2021ல் அதற்கு முந்தைய ஆண்டை விட சுமார் 30 சதவீதம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றது. இந்த தெற்காசிய நாடுகளின் ஏற்றுமதி உயர்வில் நமது அண்டை நாடான இந்தியாவிற்கும் அதிக அளவில் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிங்கப்பூருக்கு Bitumen உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ள்ளது.

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிரடி : கட்டுக்கட்டாக சிக்கிய பெட்டிகள், இரு “வெளிநாட்டு நபர்கள்” கைது – உள்ளே இருந்தது என்ன?

“ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற விஷயங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களும் ஒரு வகையில் மீண்டு வருகின்றன. இந்த 2022ல் இன்னும், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வர்த்தக நிபுணர் பேராசிரியர் பிஸ்வஜித் தார் கூறினார். சிங்கப்பூருக்கான இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி 2020ம் ஆண்டில் 282 மில்லியன் அமெரிக்க டாலர் (S$382 மில்லியன்)லிருந்து கடந்த 2021ம் ஆண்டில் 658 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது, இது 133 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல இந்தியாவின் வர்த்தக அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, ஒட்டுமொத்த ஏற்றுமதி 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 6.9 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2020ல் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்து. அதேபோல கடந்த 2021ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் அது 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.

நாங்களே கஷ்டத்துல இருக்கோம்; இதுல வெளிநாட்டு ஊழியர்களுக்கு எப்படி அதிக Basic Pay கொடுக்க முடியும்? – சிங்கப்பூரில் முதலாளிகள் “ஆவேசம்”

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இருப்பினும், பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியான Consumption எனப்படும் நுகர்வு, கடந்த 2020ல் பல நாள் பூட்டுதல் மற்றும் தொற்றுநோயின் இரண்டாம் அலைகளால் ஏற்பட்ட எழுச்சிகளின் விளைவாக மந்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts