TamilSaaga

“தொழிலாளர்களுக்கு இடையே தொற்று” : சிங்கப்பூரில் மேலும் இரண்டு மார்க்கெட் மற்றும் உணவு மையம் மூடல்

சிங்கப்பூரில் கெய்லாங் பாஹ்ரு மற்றும் பெண்டீமீரில் உள்ள சந்தைகள் மற்றும் உணவு மையங்கள் கிருமி நீக்கம் செய்வதற்காக நாளை சனிக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கி மூன்று நாட்களுக்கு மூடப்படும். அங்கிருக்கும் கடைக்காரர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பெருந்தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் கெய்லாங் பஹ்ரு சந்தை மற்றும் உணவு மையத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றபோது, ​​பாதிக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் மூடப்பட்டிருந்ததாகவும். அந்த கடைகளின் சுவறுகளில் அறிவிப்புகள் இருந்ததாகவும் பதிவிட்டுள்ளது.

மேலும் STக்கு அளித்த ஒரு அறிக்கையில், தேசிய சுற்றுச்சூழல் நிறுவனமான (NEA) இரண்டு சந்தை மற்றும் விற்பனையாளர் மையங்களை மூட இரு வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் ஜலான் பெசார் நகர சபை தானாக முன்வந்து கலந்தாலோசித்த பிறகு எடுக்கப்பட்ட முடிவு என்று NEA தெரிவித்தது. புதன்கிழமை மையம் மூடப்பட்டதாக ஸ்டால் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“இப்பொது தான் வியாழக்கிழமை ஆகிறது, சனிக்கிழமை தான் கடைகள் மூட அறிவிப்பு வந்துள்ளது,ஆனால் பெரும்பாலான ஹலால் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன,” என்று சகியா ரஹ்மான் என்பவர் கூறினார், அவர் வழக்கமாக தனது பேரக்குழந்தைகளுக்கான உணவை அங்குள்ள கடைகளில் இருந்து எடுத்துச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்த இந்திய உணவுக் கடை உரிமையாளர் சர்துல் பீபி, மூடப்படுவது வணிகத்தை பாதிக்கும் என்றாலும், மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறினார். ஜலான் பெசார் நகர சபை வியாழக்கிழமை STயிடம் அளித்த தகவலில் “எங்கள் கடைக்காரர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை. நாங்கள் பாதுகாப்பாக முன்னெடுப்பதற்கு முன் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம்.” என்று கூறியது.

Related posts