TamilSaaga

சிங்கப்பூரில் 1.5 மில்லியன் டாலரை இறக்கும் Dyson நிறுவனம் : சரசரவென என்ஜினீயர்களை களமிறக்க முடிவு – இந்தியர்களுக்கு அடித்த Jackpot வாய்ப்பு!

Dyson Limited என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரிட்டிஷ் நாட்டின் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிப்போயிருந்த பல தொழில்கள் தற்போது மீண்டு வரும் நிலையில் Dyson நிறுவனமும் எதிர் வரும் நான்கு ஆண்டுகளில் அதன் சிங்கப்பூர் நடவடிக்கைகளில் சுமார் S$1.5 பில்லியன் அளவிற்கு முதலீடு செய்யும் என்று இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 25) செயின்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டேஷனில் அதன் புதிய உலகளாவிய தலைமையகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்தபோது போது அந்நிறுவன தலைவர் அறிவித்தார்.

“MRT நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கபோறேன்.. எல்லாரும் சாகப்போறீங்க” : களேபரமான சிங்கப்பூர் ரயில் நிலையம்

“எங்களுடன் இணைந்திருக்கும் இளம் சிங்கப்பூர் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அற்புதமான கண்டுபிடிப்பு மற்றும் உற்சாகத்தால் தான் Dyson நிறுவனத்தின் இந்த விரிவாக்கம் சாத்தியமானது. உயர் தொழில்நுட்பத்திற்கு சிங்கப்பூர் சரியான இடம் என்ற எங்கள் நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று Dyson நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜேம்ஸ் டைசன் விழா நிகழ்வில் கூறினார்.

“எங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மையமாக சிங்கப்பூர் உள்ளது, நாங்கள் இங்கு எங்களின் தயாரிப்புகளை ஆராய்ச்சி செய்து, வடிவமைத்து, மேம்படுத்துகிறோம். அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுடன் எங்கள் ஆராய்ச்சித் திட்டங்களை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். இந்தக் காரணங்களுக்காகத் தான், சிங்கப்பூர் எங்களின் உலகளாவிய தலைமையகம்” என்ற பெருமையை பெற்றுள்ளது என்று கூறி புகழாரம் சூட்டினார் அவர்.

ரோபாட்டிக்ஸ், மெஷின் லேர்னிங் மற்றும் பிற துறைகளில் 250க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வேலைக்கு அமர்த்த Dyson திட்டமிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கூறியதைப்போல Dyson நிறுவனம் சிங்கப்பூரில் ஒரு புதிய உலகளாவிய “இணைய பாதுகாப்பு மையத்தை” நிறுவவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த 250 பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை சிங்கப்பூரில் இருந்து தேர்ந்தெடுக்க போகிறது Dyson என்றாலும் நிச்சயம் இந்த நிறுவனத்தின் பெரிய அளவிலான முதலீட்டால் இந்தியா உள்பட பிற வெளிநாட்டவருக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் பார்லிமென்டில் கம்பீரமாக ஒலித்த “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” பாடல் – கடைசி வரை தமிழகத்தில் தான் எந்த ஊர் என்பது தெரியாமலேயே மறைந்த அதிபர் எஸ்.ஆர்.நாதன்

அதிக அளவில் பொறியாளர்களை பணிக்கு அமர்த்தும் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் Dyson நிறுவனமும் ஒன்று. தற்போது சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள “செயின்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டேஷன் குறைந்த பட்ச கார்பனைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது – நிலையான, மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டைப் பயன்படுத்துகிறது” என்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இந்த தொற்று முடிவுக்கு வந்த மீண்டும் வேலைவாய்ப்புகள் பெறுக வேண்டும் என்பதே பலர் இளைஞர்களின் கனவாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts