TamilSaaga

சற்றுமுன் வெளியான துக்க செய்தி… சிங்கப்பூரில் பணியிட விபத்தில் இந்திய ஊழியர் பலி! கடலில் தவறி விழுந்த கொடுமை!

சிங்கப்பூரில் பணியிட இறப்பு இந்த வருடம் அதிக அளவில் சென்றுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் கூட இருவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது MOM.

MOM நவ.29ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 41 வயதான இந்தியாவை சேர்ந்த ஊழியர் நவம்பர் 25ம் தேதி காலை 11 மணியளவில் மெர்லிமாவ் சாலையில் உள்ள சிங்கப்பூர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் சாரக்கட்டு பணிகளில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தவறி ஜூரோங் தீவின் கடலில் விழுந்தார். உடனே தீவிர தேடலில் இறங்கி அவரது உடல் மீட்கப்பட்டது.

விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், கடலுக்குள் உள்ள கட்டடங்களில் சாரக்கட்டு பணிகளை உடனே நிறுத்த பொதுச் சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், 69 வயதான சிங்கப்பூரர் ஒருவர் நவம்பர் 26ம் தேதி மாலை 6 மணியளவில் 99 கெய்ர்ன்ஹில் சர்க்கிளில் உள்ள ஹில்டாப்ஸ் காண்டோமினியத்தில் உள்ள காலியான பிரிவில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டார். வெளிப்புற ஜன்னலின் கண்ணாடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​சுமார் ஒன்பது மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.

Home Cleanz Cleaning and Laundry Services, நிறுவனத்தில் பணிபுரியும் அந்த தொழிலாளி, இறந்தபோது பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து இருக்கவில்லை. இதை தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் MOM, உயரத்தில் செய்யப்பட்டு வரும் அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு நிறுவனத்திடம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜன்னலை சுத்தம் செய்யும் பொழுது அறையின் உள்ளே இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது சாத்தியமில்லாத பட்சத்தில், ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களால் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பணியிட இறப்பு 2022ல் இன்றுவரை 42 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகமாகும். 2021ல் 37 பணியிட இறப்புகளும், 2020ல் 30 பேரும், 2019ல் 39 இறப்புகளும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts