TamilSaaga

ஹாங்காங் எடுத்த “அந்த முடிவு” : சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் – ஒரு Complete Analysis

ஹாங்காங்கின் ஜீரோ கோவிட் பாலிசியால் ஆசியாவின் சர்வதேச விமானப் பயண ஹப்பாக சிங்கப்பூர் உருவெடுக்க வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஹாங்காங் அரசின் முடிவு எப்படி சிங்கப்பூருக்கு சாதகமாக இருக்கிறது.. தரவுகள் என்ன சொல்கின்றன என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

விமானப் பயணமும் கொரோனா பெருந்தொற்றும்..!

கொரோனா பெருந்தொற்று விமானப் பயணத்துறையை மொத்தமாக முடக்கிப் போட்டது என்றே சொல்லலாம். சர்வதேச அளவில் விமானப் பயணிகளின் ஹப்பாக இருக்கும் விமான நிலையங்கள், அது சார்ந்த பொருளாதாரம் இதனால் பெரிய அளவுக்குப் பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக, ஆசிய – பசிபிக் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாகவே இருந்தது.

சிங்கப்பூர் MRT.. பயணிகளின் பயணத்தை இனிமையாக்க புதிய நடவடிக்கை – 2 வருட Project, கையிலெடுத்த LTA மற்றும் MRT

உலக அளவில் சர்வதேசப் பயணிகளை அதிக அளவு கையாளும் சிங்கப்பூரிங் ஷங்கி விமான நிலையம், 2021-ல் 35 லட்சம் பயணிகளைக் கையாண்டிருக்கிறது. 2019-ல் இந்த எண்ணிக்கை 68.3 மில்லியன். இதனுடன் ஒப்பிடுகையில், 2021-ல் 4.5% பயணிகள் மட்டுமே. 2019-ல் சர்வதேச அளவில் 2019-ல் 7-வது இடத்தில் இருந்த ஷங்கி விமான நிலையம், 2021-ல் அந்த இடத்தை விட்டு பின்தங்கி விட்டது. அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் 18-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், முதல் 20 இடங்களுக்குள் இருக்கும் ஒரே ஒரு ஆசிய விமான நிலையம் இது மட்டுமே.

கொரோனா கால கட்டுப்பாடுகளை விரைவாக விலக்கிக் கொண்டது, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகளால் ஆசியாவுக்கு வெளியில் இருக்கும் விமான நிலையங்கள் பயனடைந்திருக்கின்றன. குறிப்பாக, ஆம்ஸ்டர்டாம், துபாய் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையங்கள் சராசரியாக 25 மில்லியன் சர்வதேச பயணிகள் வருகையை அந்த ஆண்டில் பதிவு செய்திருக்கின்றன. ஆனால், ஆசியாவின் மற்ற விமான நிலையங்களை விட ஷங்கி விமான நிலையத்தின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது என்று சொல்லலாம்.

பாங்காக், ஹாங்காங், கோலாலம்பூர், தைபே மற்றும் டோக்கியோ போன்ற ஆசியாவின் மற்ற போட்டி விமான நிலையங்களை விட பெருந்தொற்று காலத்தில் ஷங்கி விமான நிலையத்தின் செயல்பாடு ஒரு படி மேலே இருந்ததைத் தரவுகள் நமக்குச் சொல்கின்றன. 2019-ல் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கையில் 2021-ல் 4.5% பயணிகளைக் கையாண்டு சியோல் விமான நிலையம் மட்டுமே ஷங்கியின் எண்ணிக்கையை மேட்ச் செய்கிறது.

மிகப்பெரிய போட்டியே ஹாங்காங்தான்!

உள்ளூர் சந்தைகளைச் சார்ந்திராமல் சர்வதேச அளவில் பயணிகளைக் கவர்வதில் ஷங்கியின் மிகப்பெரிய போட்டியே ஹாங்காங் விமான நிலையம்தான். ஏறக்குறைய இரண்டு விமான நிலையங்கள், அவை அமைந்திருக்கும் சூழல் ஆகியவை ஒன்றுபோலவே அமைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். அதேபோல், பயணிகள் வருகை, புறப்பாடு மற்றும் டிரான்ஸிட் எனப்படும் வேறு விமானங்களுக்கு மாறும் பயணிகளின் எண்ணிக்கையும் இந்த இரண்டு விமான நிலையங்களைப் பொறுத்தவரை ஒன்றுபோலவே இருக்கிறது.

மேலும், மூன்றாவது ஓடுதளம், புதிய டெர்மினல்கள் என அடுத்த சில பத்தாண்டுகளுக்கான முதலீடு, திட்டம் ஆகியவற்றிலும் இவற்றின் செயல்பாடுகள் ஒத்திருக்கின்றன என்றே சொல்ல முடியும். பெருந்தொற்று காலத்துக்கு முன்னர், அதாவது 2019-ல் 71.5 மில்லியன் பயணிகளைக் கையாண்டு ஹாங்காங் விமான நிலையம் சிங்கப்பூர் ஷங்கி விமான நிலையத்தை விட சற்றே பெரியதாக இருந்தது. பெருந்தொற்று கால கட்டுப்பாடுகள் தொடங்கியதும் இந்தநிலை அப்படியே மாறியது. ஹாங்காங் கையாண்ட பயணிகளை விட இரண்டு மடங்கு பயணிகளை சிங்கப்பூர் கையாளத் தொடங்கியது. காரணம், VLCs எனப்படும் vaccinated travel lanes, அதாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்காகவே தனி தடத்தை அனுமதித்தது சிங்கப்பூர். இது, ஷங்கி விமான நிலையத்தை நாடி அதிக பயணிகள் வருவதற்கு வழி வகுத்தது.

தற்போதைய சூழலில் சிங்கப்பூர், VLCs திட்டத்தின்கீழ் 27 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு குவாரண்டீன் இல்லாமல் தங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்கிறது. அதேபோல், 60 நாட்டுப் பயணிகளுக்கு 7 முதல் 10 நாட்கள் குவாரண்டீனுடன் அனுமதி இருக்கிறது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது. நவம்பர் 2021-ல் பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் 7% ஆக இருந்த எண்ணிக்கை, டிசம்பர் 2021-ல் 13% ஆகவும் உயர்ந்திருக்கிறது. ஆனால், ஜீரோ கோவிட் கொள்கையால் ஹாங்காங், தனது எல்லைகளை மொத்தமாக மூடிவிட்டது. எல்லா பயணிகளுக்கும் 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமான விதி அங்கு அமலில் இருக்கிறது. இதனால், நவம்பர் 2021-ல் முந்தைய காலத்தை விட 2% ஆக நவம்பர் 2021-லும், டிசம்பர் 2021-ல் 3% ஆக மட்டுமே இருக்கிறது. 2021-ம் ஆண்டை மொத்தமாக எடுத்துக்கொண்டால், சிங்கப்பூரின் பயணிகள் வருகை 4.5% ஆக இருக்கும் நிலையில், ஹாங்காங்கின் எண்ணிக்கை 1.9% ஆக மட்டுமே இருக்கிறது.

இடைவெளி அதிகமாகுமா?

ஒமைக்ரான் பரவல் காரணமாக சிங்கப்பூரில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், 2022-ன் முதல் மூன்று மாதங்களில் சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை சற்றே குறையலாம். VLCs திட்டத்தின் கீழ் பயணிகளின் எண்ணிக்கையும் 50% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. முந்தைய VLCs திட்டம் முழுமையாகப் பயன்படுத்தப்படாத நிலையில், பயணிகள் எண்ணிக்கை குறைவு என்பது அளவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. தடுப்பூசி திட்டத்தில் இணையாத பயணிகளையும் டிரான்ஸிட்டுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் அனுமதிக்கப்படுகிறது என்பதால், மொத்தமாக பயணிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. அதேநேரம், ஒமைக்ரானைக் கட்டுப்படுத்த ஹாங்காங்கில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், ஏற்கனவே மிக மிகக் குறைவாக இருக்கும் பயணிகள் எண்ணிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படும்.

சிங்கப்பூர் உள்பட 153 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஹாங்காங் வர ஜனவரியில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கடுமையான தனிமைப்படுத்துதல் விதிகளும் அமலில் இருக்கின்றன. இந்த இரண்டு காரணங்களால், ஹாங்காங்கின் சர்வதேச பயணிகளின் ஹப் என்ற அந்தஸ்து பாதிக்கப்படும் என்கிறார்கள். மேலும், ஹாங்காங்கின் Cathay Pacific Group நிறுவனமும் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இதனால், கொரோனாவுக்கு முந்தைய பயணிகளின் எண்ணிக்கையில் 3% மட்டுமே டிசம்பர் 2021-ல் அந்த நிறுவனம் அடைந்திருக்கிறது. இந்த காலத்தில் சிங்கப்பூரின் SIA நிறுவன விமானங்கள் 17% எண்ணிக்கையை எட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், SIA விமானங்களில் பயணிகள் எண்ணிக்கையும் 50% இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால், சர்வதேச அளவில் பயணங்களை மேற்கொள்வதற்கான விதிகள் தளர்த்தப்படும் பட்சத்தில், சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக உயரும். சீனா மற்றும் ஹாங்காங் போன்றவை விதிகளைக் கடுமையாக்கியிருக்கும் நிலையில், இது சிங்கப்பூரில் பொருளாதார நடவடிக்கைகள் சீராக உதவி செய்யும்.

ஹாங்காங், குவாரண்டீன் விதிகளை தளர்த்தினாலும் அந்த நாட்டுக்குச் செல்லும் பயணிகள் அல்லது டிரான்ஸிட்டுக்காக அந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். காரணம், அதன் ஜீரோ கோவிட் கொள்கை. அதைக் கைவிட்டால் மட்டுமே எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆனால், இந்த ஆண்டில் அது நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

சரக்கு விமானங்கள் Cathay-க்குக் கைகொடுக்குமா?

ஹாங்காங்கின் Cathay நிறுவனம் 2021-ஐ விட 2022-ல் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகளைக் கையாளும். டிசம்பரில் 92,000 பேர் உள்பட 2021-ல் 7 லட்சமாக அந்த நிறுவன விமானங்களைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை இருந்தது. அதேநேரம், இந்த காலத்தில் சிங்கப்பூரின் SIA நிறுவனத்தின் எண்ணிக்கை 21 லட்சமாகும்.

சரக்கு விமானங்களைக் கையாள்வதிலும் Cathay நிறுவனத்துக்கு ஏற்றம் இல்லை. விமானிகள் உள்ளிட்ட குழுவினருக்கான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தேவை அதிகரித்ததால், முந்தைய காலத்தை விட 20% அளவுக்குத் தனது சரக்கு விமானங்களின் சேவையை அந்த நிறுவனம் குறைத்துக் கொண்டது. கூடுதலாக 5% சேவையை அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தாலும், பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் வழங்கிய சேவைகளில் பாதி அளவுக்குக் கூட அந்த நிறுவனம் வழங்கவில்லை. எடையைக் கருத்தில் கொண்டு கணக்கிட்டால், முந்தைய காலத்தில் கையாண்ட சரக்குகளில் 76% அளவுக்கு Cathay நிறுவனம் கையாண்டிருக்கும் நிலையில், SIA 96% அளவுக்கு சரக்குகளைக் கையாண்டிருக்கிறது.

சிங்கப்பூர் விமான நிலையம், கொரோனாவுக்கு முந்தைய சூழலை விட கடந்த டிசம்பரில் 5% அதிகமாகவே சரக்கு விமானப் போக்குவரத்தைக் கையாண்டிருக்கிறது. 2021-ல் மட்டுமே 1.95 மில்லியன் டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 3% மட்டுமே குறைவு.

போட்டி எகிறும்!

விமானிகள் குழுவுக்கான கட்டுப்பாடுகள் ஹாங்காங்கில் அதிகரிக்கப்பட்டிருப்பது, சிங்கப்பூருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும். பொதுவாகப் பார்த்தால், சிங்கப்பூரை விட ஹாங்காங் விமான நிலையம் சரக்குகளைக் கையாள்வதில் பெரியதாகவே கருதப்படுகிறது. 2019-ல் சிங்கப்பூர் விமான நிலையம், 2.01 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்ட நிலையில், ஹாங்காங் விமான நிலையம் அதை விட இரண்டு மடங்கு அளவுக்கு 4.81 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டிருக்கிறது. சரக்கு விமானங்களைக் கையாள்வதைப் பொறுத்தமட்டில், உலகின் மிகப்பெரிய விமான நிலையம் ஹாங்காங்தான். இந்த வரிசையில் சிங்கப்பூர் விமான நிலையம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. டிசம்பரில் மட்டும் 4,77,000 டன் உள்பட 2021-ல் 5.03 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டிருக்கிறது. இது, 2019-ஐ விட 4% அதிகமாகும்.

“விளையாட்டை வைத்தும் உதவ முடியும்” – சிங்கப்பூரின் `Find Your Way’ திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சரக்குகளைக் கையாள்வதில் ஹாங்காங்கை சிங்கப்பூர் முந்த முடியாது. காரணம், சீனாவுக்கு மிக அருகில் இருப்பது மற்றும் வட அமெரிக்காவுக்கான தூரமும் குறைவு என்பதால், ஹாங்காங் விமான நிலையத்துக்கு அதிக சரக்கு விமானங்கள் வருவது இயல்பானது. அதேநேரம், இந்த காலத்தில் ஹாங்காங் விமான நிலையத்துடனான இடைவெளியை சிங்கப்பூர் குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பயணிகள் எண்ணிக்கையில் ஹாங்காங்கை முந்துவது சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு எளிதில் நடக்கூடிய விஷயமாகவே இருக்கிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts