TamilSaaga

வீட்டுக்காக கண் அயராமல் வேலை… அதிகாலையில் நிகழ்ந்த விபத்து… எவ்வளவோ போராடியும் தமிழக ஊழியருக்கு சிங்கப்பூரில் சிறை… பிழைப்புக்காக வந்தவருக்கு திசை மாறிய வாழ்க்கை!

கவனக்குறைவாக வண்டியை ஓட்டி இரண்டு பேரின் உயிர் போவதற்கு காரணமாக இருந்த இந்திய ஓட்டுநருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Bright Asia Construction நிறுவனத்தில் site supervisor-ஆக வேலை பார்த்து வந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளைச்சாமி பிரபு(37). இவர் கடந்த வருடம் ஏப்ரல் 20ந் தேதி அதிகாலை கம்பெனியில் இருந்து 17 பேரை அழைத்து கொண்டு Pan Island Expressway-ல் லாரியை வந்துக்கொண்டு இருந்தார்.

அப்போது, Jalan Baharல் வெளியேறும் போது Expressway ஐந்து வழி சாலையாக பிரியும். பிரபு கடைசி பாதையை எடுக்க வேண்டி லாரியை அந்த பக்கமாக திருப்பி சென்றார். அப்போது சாலையை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குப்பை அள்ளும் ட்ரக்கை கவனிக்க தவறினார்.

இதனையடுத்து, லாரி அந்த ட்ரக் மீது பயங்கரமாக மோதியது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் லாரியில் இருந்த 15 பேருக்கு பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

லாரியில் முன் பகுதியில் அமர்ந்து இருந்த இருவரில் சம்பவ இடத்திலேயே 28 வயதான சுகுணன் சுதீஷ்மோன் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த 33 வயதான டோபசல் ஹொசைனுக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் அவரும் இறக்க நேர்ந்தது. இறந்த இருவரும் வெளிநாட்டு ஊழியர்கள்.

இதுகுறித்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதில் அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பிரபு லாரியை ஓட்டி வரும் போது அதிகாலை என்பதால் பெரிய வாகன நெரிசல் இல்லை. சாலையும் தெளிவாகவே இருந்தது. சாலை ஓர நின்ற ட்ரக்கும் தெரியும்படி இருந்ததால் இது ட்ரைவரின் கவனக்குறைவே எனக் கூறினார்.

இதை தொடர்ந்து வாதிட்ட பிரபுவின் வக்கீல் எட்மண்ட் நாதன், பிரபு வேகமாக வண்டியை ஓட்டவில்லை. கட்டுபாட்டுடனே வந்தார். அவர் வந்த ஐந்தாவது வழி மிக குறுகலாக இருந்ததாலும், லாரியின் அளவு பெரிதாக இருந்ததாலுமே இந்த விபத்து நடந்தது என வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தினை கேட்ட நீதிபதி, இது டிரைவரின் கவனக்குறைவால் நடந்த விபத்து தான். அதனால் இந்தியரான பிரபுவிற்கு 12 மாதம் சிறைத்தண்டனையும், அவர் எந்தவிதமான வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்று தீர்ப்பளித்தார். அவரின் டிரைவிங் லைசன்ஸ் 8 வருடத்திற்கு தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இருவரின் இறப்புக்கு பிரபுவிற்கு 3 வருட சிறைத்தண்டனை மற்றும் $10000 அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts