TamilSaaga

“திருவாரூரில் திருமணம்.. சிங்கப்பூரில் வேறு ஒரு பெண்ணுடன் கணவனுக்கு தொடர்பு..” விரக்தியில் புதுமணப்பெண் தற்கொலை – சிங்கை போலீஸுக்கு பயந்து கணவனும் தற்கொலை!

எத்தனையோ லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் நமது சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது நாம் அறிந்த விஷயமே. இந்த பதிவிலும் சிங்கப்பூர் வந்து பணிபுரிந்து, பின் பிரச்சனையில் சிக்கி இங்கேயே இறந்துபோன ஒரு தமிழரை பற்றித்தான் பார்க்கவிருக்கிறோம். தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி தளத்திற்கு கிடைத்த பிரத்தியேக செய்தி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

குன்னலூர், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன ஊர், இந்த ஊரை சேர்ந்தவர் தான் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்கனவே சிங்கப்பூரில் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்துவந்த நிலையில் இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.

அந்த பெண்ணின் அக்காவிற்கும் ஏற்கனவே நல்ல இடத்தில் திருமணம் முடிந்த நிலையில், இளைய பெண்ணுக்கு சிங்கப்பூர் மாப்பிள்ளை கிடைத்ததும் குடும்பமே பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. மனைவியோடு மற்றும் குடும்பத்தோடு சில மாதங்கள் மகிழ்ச்சியாக கழித்த ரவியும் மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார்.

ஒரு சில மாதங்களில் திரும்ப வந்து, தேவையான ஏற்பாடுகளை செய்து, மனைவியையும் சிங்கப்பூர் அழைத்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் ரவி. புது வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியில் இருந்த அந்த பெண்ணுக்கு அதன் பிறகு தான் சோதனை காலம் துவங்கியுள்ளது.

மேலும் படிக்க – “Work Permit”-ல் சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. 2 நாட்கள் தமிழகத்தில் “observation”.. 2 நாட்கள் சிங்கையில் “Training” – 15 நாட்களில் குவிந்த வெளிநாட்டு ஊழியர்கள்

நாட்கள் செல்ல செல்ல அவரிடம் இருந்து அழைப்புகள் வருவதுகூட குறைந்துள்ளது, சில மாதங்களில் தமிழகம் வந்து பெண்ணை சிங்கப்பூர் அழைத்து செல்கின்றேன் என்று கூறிய ரவி, பல மாதங்கள் ஆகியும் திரும்ப வராதது அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவர் ஊருக்கு பேசுவதை கூட முற்றிலுமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது தான் பெண் வீட்டார் ரவியை பற்றி சிங்கப்பூரில் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து, அவர் இங்கு பயன்படுத்திய வேறு ஒரு நம்பரை கண்டுபிடித்துள்ளனர். அந்த நம்பருக்கு போன் செய்தபோது ஒரு பெண் போனை எடுத்துள்ளார், ரவியை பற்றி விசாரித்தபோது தான் ரவியின் மனைவி தான் என்ன வேண்டும் சொல்லுஙக என்று கூற குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

எனது பெண்ணுக்கு அவர் தாலி கட்டியுள்ளார் என்று கூற, அது எனக்கு தெரியாது நான் தான் அவரது மனைவி என்று கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார். இந்த அதிர்ச்சி செய்தி கேட்ட புதுப்பெண் மன அழுத்ததில் தற்கொலை செய்துகொள்ள அவருடைய பெற்றோருக்கு ரவி மீதான கோபம் அதிகரித்துள்ளது.

குன்னலூர் போலீஸ் வழியாக சிங்கப்பூர் போலீசுக்கு புகார் அளிக்கப்பட சிங்கப்பூர் போலீஸ் அடுத்த நாளே ரவியை அணுகி விசாரித்துள்ளது. சிங்கப்பூரில் பார்த்துவந்த அருமையான வேலை, கள்ளத்தனமாக நடத்தி வந்த குடும்பம் என்று எல்லாம் பாலாகப்போகிறது என்று பயந்த ரவியும், சிங்கப்பூரிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சிங்கப்பூர் வரும் ஒரு சில தொழிலாளர்கள் காதல் மோகத்தில் சிக்கி தங்கள் வாழ்க்கையையும் ஏன் சில சந்தர்ப்பங்களில் தங்கள் உயிரையும் இழக்கின்றனர் என்பதற்கு ரவியும் ஒரு சாட்சி. ஒரு சில பேர் செய்கின்றன இதுபோன்ற செயல்களால் அவர்கள் பாதிக்கப்படுவதுமட்டுமல்லாமல் பிற குடும்பங்களும் அழிந்துபோகும் நிலை ஏற்படுகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts