TamilSaaga

“Work Permit”-ல் சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. 2 நாட்கள் தமிழகத்தில் “observation”.. 2 நாட்கள் சிங்கையில் “Training” – 15 நாட்களில் குவிந்த வெளிநாட்டு ஊழியர்கள்

பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் Recruitment என்பது கடந்த 2 ஆண்டுகளாக சைலன்ட் மோடில் இருந்தது. புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயாராக இருந்தாலும், எல்லைகள் மூடப்பட்டிருந்ததால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருந்தது.

இந்த சூழலில் தான் சமீபத்தில் அனைத்து வித பாஸ் வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூர் வரலாம் என்ற வரப்பிரசாத அறிவிப்பை சிங்கை அரசு வெளியிட்டது. அதாவது, எல்லைகளின் கதவை திறந்தது.

எனினும், work permit holders மீண்டும் தாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தில் வேலைக்கு செல்வதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருச்சியில் இருந்து work permit மூலம் சிங்கப்பூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க – “TITAN” எனும் சகாப்தத்தை உருவாக்கிய தமிழர் – இன்று வரை வெளிநாட்டு நிறுவனங்களால் அசைத்துக் கூட பார்க்க முடியாத “உச்சம்”

குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள Man Power ஏஜென்சிகள் தமிழ்கத்தில் இருந்து பணியாளர்களை திரட்டும் பணியை முடுக்கிவிட்டுள்ளன. இதற்காக அந்த ஏஜென்சிகள் ஏற்கனவே கம்பெனிகளிடம் இருந்து பணமும் பெற்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி, முதன்முறையாக விசா அடித்து சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் 2 நாட்கள் இந்தியாவில் தங்கவைக்கப்பட்டு PCR Test எடுத்து, முழுவதும் Observation செய்யப்பட்டு 3வது நாள் தான் ஃபிளைட் ஏற்றுகிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் சிங்கப்பூர் வந்து, சிங்கை அரசு ஏற்படுத்தியுள்ள “Onboard Centres”-களில் கட்டாயம் 2 நாட்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். அந்த 2 நாளில், சிங்கப்பூரில் கடைபிடிக்கப்படும் பெருந்தொற்று விதிமுறைகள், கோவிட் தொற்று ஏற்பட்டால் எப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்? போன்ற அனைத்து அப்டேட்டுகளும் புதிதாக சிங்கப்பூர் வருபவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த “Onboard Centres”-களில் 50லிருந்து 100 பேர் வரை தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விதிமுறைகள் போதிக்கப்படுகிறது. இதற்கான கட்டணங்களை ஏஜென்சிகள் அந்தந்த நிறுவனங்களிடமிருந்து வாங்கிக் கொள்கின்றன. இவ்வாறாக கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கில் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் கொண்டு வரப்படுகின்றனர்.

இதனால் டிக்கெட் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமெனில், ரூ.20,000லிருந்து 40,000 வரை டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், குடும்பம் குடும்பமாக பலர் தமிழகம் செல்வதால் டிக்கெட் ஒருபக்கம் ஏறிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஏஜென்சிகள் அதிகளவு அழைத்து வரும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் டிக்கெட் விலை உயர்ந்து வருகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts