TamilSaaga

சிங்கப்பூருக்கு இனி வாரத்தில் 3 Non-VTL, 4 VTL விமானங்கள்.. “Flyscoot” லேட்டஸ்ட் அறிவிப்பு – இனி சென்னை போக வேண்டியதில்லை!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு FlyScoot விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. VTL மற்றும் Non-VTL என்று இரண்டு வித சேவைகளையும் வழங்கி வருகின்றனர். வாரத்தில் ஒருசில நாட்கள் Non-VTL விமானங்களையும், சில நாட்கள் VTL விமானங்களையும் இயக்கி வந்தது.

அதாவது வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. அதில், வெறும் 2 நாட்கள் மட்டுமே VTL விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், இப்போது வாரத்தில் 7 நாட்களும் விமானங்கள் இயக்கப்படுவதாக Flyscoot அறிவித்துள்ளது.

அதில், வாரத்தில் 3 நாட்கள் Non-VTL விமானங்களும், 4 நாட்கள் VTL விமானங்களும் இயக்கப்பட உள்ளன. நமது தமிழ் சாகாவுக்கு கிடைத்த Exclusive Update இது. VTL விமானங்களுக்காக பயணிகள் இதுநாள் வரை சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. இனி திருச்சியில் இருந்தே VTL சேவை கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

மேலும் படிக்க – கழட்டிவிட்ட மலேசியா.. கர்ஜிக்கும் சிங்கப்பூர்.. எதிர்பார்ப்புடன் வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் ஜெயிக்க வைப்பது சிங்கப்பூரா? மலேசியாவா?

ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில், FlyScoot-ல் டிக்கெட் கேன்சல் செய்தால், Refund கிடைக்காது. இது ஒரு பெரிய தலைவலியாகவே உள்ளது. சிலர், VTL விமானமா, Non-VTL விமானமா என்று தெரியாமல் டிக்கெட் புக்கிங் செய்துவிடுகின்றனர். ஆனால், ஏர்போர்ட் வந்த பிறகே அவர்களுக்கு சிக்கல் உருவாகிறது. திருச்சியில் FlyScoot-க்கு என்று தனியாக அலுவலகமும் கிடையாது.

இதனால் Date Change பண்ண முடியாமலும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, முழு விவரம் தெரிந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது நல்லது. இல்லையெனில், நேரடியாக ஏஜெண்டுகள் மூலம் விவரம் தெரிந்து கொண்டு புக்கிங் செய்வதே சாலச் சிறந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts