TamilSaaga

ராஜேந்திர சோழனின் பெயரை சுமந்து கம்பீரமாக உலகெங்கும் உலா வந்த ஏர் இந்தியா விமானம்…. தமிழகத்தின் வீரத்தை உலகறிய செய்த மாபெரும் பயணம்!

புகழ்பெற்ற ஏர் இந்தியா விமான சேவையை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற விமானத்தின் பெயருக்கு தமிழக மன்னரான ராஜேந்திர சோழனின் பெயரை ஒரு காலத்தில் சூட்டினார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா… உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தேறி இருக்கின்றது.

1970 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் போயிங் 747 என்ற விமானத்தினை புதிதாக வாங்கி இருந்தது. முதலில் மௌரிய பேரரசுகளில் புகழ்பெற்ற மன்னரான அசோகரின் பெயரில் விமானம் இயக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மன்னரும், கடல் கடந்து சென்று மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, சுமத்திரா, இந்தோனேசியா மற்றும் மியான்மர் நாடுகளுக்குச் சென்று வெற்றி கொடியை நாட்டிய ராஜேந்திர சோழனின் பெயரில். விமானத்தை இயக்கியது.

இதன் மூலம் தமிழக மன்னரின் பெயர் உலகம் முழுவதும் வலம் வந்தது. இவரது பெயர் பொறிக்கப்பட்ட விமானமானது மும்பையில் இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெனிவா, ஜப்பான் முதலிய நாடுகளை கடந்து லண்டன் வரை சென்றது.

Related posts