TamilSaaga

“இந்தியர்களும் மலேசியர்களும் சிங்கப்பூரில் பிரதமராக முடியுமா?”.. காரசாரமாக நடந்த விவாத நிகழ்ச்சி – “நச்” பதில் சொன்ன அமைச்சர் சண்முகம்!

உலக அளவில் உள்ள மற்ற பல இன சமூகங்களைப் போலவே சிங்கப்பூரிலும் “இனவெறி” உள்ளது என்று நமது சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் 24 நிமிட பிபிசி போட்காஸ்ட் நேர்காணலின் போது பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் தொகுப்பாளருமான ஸ்டீபன் சாக்கரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சிங்கப்பூரில், மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்களை குறிவைக்கும் “பாகுபாடு” உள்ளதா என்று அமைச்சர் சண்முகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த ஜூன் 29 அன்று ஒளிபரப்பப்பட்ட பிபிசியின் நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சியான “Hardtalk”ல் அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

பிரதமர் லீ சியென் லூங், சிங்கப்பூரின் முதல் பிரதமர் மறைந்த லீ குவான் யூ உள்ளிட்ட பலரும் இந்த Hardtalk நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறும் இந்தியாவின் PSLV-C53 ராக்கெட்.. இன்னும் 24 மணி சிங்கப்பூரையே பெருமைப்பட வைக்கப்போகும் அற்புதம்! – உற்று நோக்கும் உலக நாடுகள்!

நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகத்திடம் கேட்கப்பட்ட கேள்வி தான் என்ன?

சிறுபான்மையினர் சிங்கப்பூர் பிரதமராக ஆவது எந்த அளவு யதார்த்தமானது? என்ற கேள்வி தான் அவரிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு சண்முகம் அளித்த பதில் : “ஒரு இந்தியர் பிரதமராக முடியாது அல்லது மலாய்க்காரர் சிங்கப்பூர் பிரதமராக முடியாது என்று சொல்வது சரியானது என்று நான் நினைக்கவில்லை”.

24 மணி நேரத்தில் 2 மடங்கு அதிகரித்த தொற்று.. 2 ஆண்டுகளுக்கு பிறகு கனவுகளுடன் சிங்கை செல்ல காத்திருக்கும் ஊழியர்கள்.. புதிதாக விசா பெற்றவர்களுக்கு சிக்கலா? – Exclusive Report

“UKல் எத்தனை வெள்ளையர் அல்லாத பிரஜைகள் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள்? எனவே, விளங்க சொல்லவேண்டும் என்றால் அரசியலில் இனம் முக்கியம். இங்கிலாந்து வரலாற்றில் உள்ள 55 பிரதமர்களில் வெள்ளையர் அல்லாத பிரதமர்கள் யாருமே இல்லை.

காரசாரமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகள் நமது அமைச்சர் பதில் அளித்தார்.

Related posts