சிங்கப்பூர் என்றாலே பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லாத நாடு என்பதை முன்கூட்டியே அறிந்த ஒன்றுதான். ஆனால் சிங்கப்பூரில் மற்றும் ஒரு பிரபலமான விஷயம் மசாஜ் சென்டர். நம் ஊர்களில் காய்கறி மார்க்கெட்டுகள் ஆங்காங்கே இருப்பதைப் போன்று சிங்கப்பூரில் மசாஜ் சென்டர்கள் இருக்கும்.
ஆனால் உண்மையில் அவை மருத்துவரீதியாக மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த படுவது என்பது மிக குறைவு தான். மசாஜ் சென்டர் என்ற பெயரில் சிங்கப்பூரில் பாலியல் சேவைகளை பெரும்பாலான இடங்களில் வழங்கப்படுகின்றன. இதில் மற்றொரு வருத்தத்திற்குரிய சம்பவம் என்னவென்றால் சம்பளம் குறைவாக வாங்கும் வெளிநாட்டு ஊழியர்களும் தங்களது பணத்தினை இந்த மசாஜ் சென்டர்களில் தொலைப்பது தான்.
சிங்கப்பூரில் ஜுராங் ஈஸ்ட் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இதுபோன்று சம்பவங்கள் நடக்கின்றன என காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அதிரடி ரைடில் ஈடுபட்டனர். இதில் நான்கு மசாஜ் சென்டர்களில் முறைகேடான சேவை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது .மேலும் அதில் சில சென்டர்கள் உரிமம் இல்லாமல் சேவையை வழங்குவதாக கண்டுபிடிக்கப்படவே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் தவறான சேவை வழங்கியதற்காக 26 வயதிற்கு மேல் மற்றும் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை கவனித்த குடியிருப்பு வாசிகள் அளித்த தகவலின் பெயரில் போலீசார் துரிதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அனைவரின் பாராட்டினையும் பெற்றுள்ளது.