TamilSaaga

உலக மக்கள் எல்லோரும் விரும்பும் சிங்கப்பூர் சீமை… ஆய்வு முடிவில் வெளியான தரவரிசை பட்டியல்!

உலகெங்கிலும் உள்ள மக்கள் சுற்றுலாவிற்காக செல்ல விரும்பும் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 15வது இடத்தை பெற்றிருந்த சிங்கப்பூர் இந்த ஆண்டு உங்கள் முன்னேறி பதினோராவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த 100 நகரங்களுக்கான கணக்கெடுப்பில் சிங்கப்பூர் இந்த இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறந்த பத்து நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன:

  1. பாரிஸ்
  2. துபாய்
  3. மட்டிரிட்
  4. தோக்கியோ
  5. ஆம்ஸ்டராம்
  6. பெர்லின்
  7. ரோம்
  8. நியூயார்க்
  9. பார்சலோனா
  10. லண்டன்

மேற்கண்ட நகரங்களுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் 11 வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. பயணிகளுக்கு பயணங்களை வழங்கும் முறை, டூரிசம், பொருளாதாரம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசையானது கணக்கில் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts