TamilSaaga

“தலைக்கவசம் உயிர்கவசம்” : நிரூபித்த சிங்கப்பூர் Ang Mo Kio பகுதி விபத்து – Video உள்ளே

சிங்கப்பூரில் Sg Road Vigilante என்ற ஒரு முகநூல் பதிவில் வெளியான விபத்தின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அந்த முகநூல் பதிவில் கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளியில் Hyundai காரில் செல்லும் ஒருவர் இடதுபுறம் திரும்புவதற்கான சமிக்கி விளக்குகளை எரிய விட்டவாறு அருகிலிருந்த Laneனை நோக்கி மாற நினைத்து Lane மாற்றம் செய்கின்றார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் தனிநபர் கடன் மோசடி”

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அதே Laneல் வேகமாக வந்த ஒரு கனரக BMW கார் அந்த Hyundai கார் மீது மோதி நிற்கின்றது. அதே நேரத்தில் அந்த BMW காருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவரும் வேகமாக வந்த நிலையில் அந்த BMW கார் மீது மோதி நிலைதடுமாறுகின்றார். நல்வாய்ப்பாக அந்த இருசக்கர வாகன ஓட்டுநர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் காயத்தில் இருந்து தப்பியுள்ளார்.

விபத்து காணொளியை காண – Video Curtsey SG Road Vigilante FB Page

அங் மோ கியோ அவென்யூ ஒன்றில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, கார்களுக்கு பின்னல் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய போதிய இடைவெளியை அந்த இருசக்கர வாகன ஓட்டுநர் கடைபிடிக்கவில்லை என்றும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சமிக்கை செய்து தான் அந்த கார் திரும்பியுள்ளது என்று சிலரும். அதே சமயம் சாலைக்கு நடுவில் இப்படியா பொறுப்பில்லாமல் Lane மாற்றுவது என்றும் சிலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது இந்த நிகழ்வு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த விபத்து குறித்து கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts