TamilSaaga

சாங்கி விமான நிலையத்தில் லக்கேஜ்களை முன்பாகவே ஒப்படைக்கும் வசதி… இனி ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாம்!

மற்ற பயணம் போல இல்லாமல் விமான பயணம் என்றாலே ஒரு சிறு படபடப்பு இருக்கும். ஏர்போர்ட்டுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்று லக்கேஜ்களை ஒப்படைக்க வேண்டும் மற்றும் போர்டிங் பாஸை முன்னதாகவே பெற வேண்டும் என ஒரு சிறு படபடப்பு நம் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த டென்ஷனை எல்லாம் போகும் வகையில் பயணிகள் தங்களது லக்கேஜ்களை மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்தில் ஒப்படைக்கும் வசதியானது சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் திறக்கப்பட்டுள்ளது.

முதலில் 10 விமான நிறுவனங்கள் மட்டுமே இந்த சேவையை வழங்கி வந்த நிலையில் தற்பொழுது 16 விமான நிறுவனங்கள் இந்த சேவையை வழங்க முன் வந்துள்ளது. இதற்காகவே முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கும் இயந்திரமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பெட்டிகளை ஒப்படைக்கும் பொழுது பெட்டிகளின் உயரம், எடை போன்றவற்றை சரிபார்த்து அதன் வடிவத்திற்கு ஏற்ப அதற்குரிய இடங்களில் இயந்திரம் தானாகவே வைத்து விடும். விமானம் புறப்படுவதற்கு முன்பாக சரியாக இயந்திரமானது விமானங்களுக்கு பெட்டியை அனுப்பி வைக்கும்.

மிகப் பிரமாண்டமான பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் தினசரி சராசரியாக 6000 திற்கும் மேற்பட்ட லக்கேஜுகள் விமானங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அக்டோபர் மாதம் மட்டும் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொண்டு ரிலாக்ஸாக விமான நிலையத்தில் ஓய்வெடுத்தனர் என கணக்கெடுப்பு கூறுகின்றது. விமான பயணம் 24 மணி நேரம் இருக்கும் பொழுது விமான நிலையத்தின் ஓய்வெடுக்கும் பகுதிக்கு சென்று பயணிகள் ஓய்வு எடுக்கலாம். ஆனால் குறிப்பிட்ட விமான சேவைகள் மட்டுமே இந்த பயணத்தை இந்த வசதியை வழங்கும் என்பதால் பயணிகள் சரிபார்த்துக் கொண்டு தங்களது லக்கேஜ்களை முன்னதாகவே ஒப்படைத்து ரிலாக்ஸ் ஆக விமான நிலையத்தில் ரெஸ்ட் எடுக்கலாம்.

Related posts