TamilSaaga

வாழப்பழம் மாதிரி பேசிய ஏஜென்ட்கள்… வழுக்கி விழுந்த தமிழக இளைஞர்களா… உங்க காச ஆட்டைய போட்ட ஏஜென்ட்டிடம் இருந்து மொத்த காசையும் வாங்குவது எப்படி… சும்மாவே விடக்கூடாதுல!

சிங்கப்பூரில் வேலைக்கு செல்லலாம் என இளைஞர்களோ, பெண்களோ முடிவெடுக்கும் போது அதற்கான காசை ஏற்பாடு செய்வது பெரிய பிரச்னை. அதைவிட, அந்த காசை சரியான ஆளிடம் கொடுத்து நல்ல வேலையில் போய் சேருவதே பெரிய கஷ்டமாகி போய் விடுகிறது.

தொடர்ச்சியாக, ஏஜென்ட்கள் சிலர் செய்யும் பித்தலாட்டங்களால் வெளிநாட்டு கனவை தொலைத்து காசை இழந்து பலர் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல லட்ச ரூபாயை கட்டி விட்டு வெளிநாடு போக முடியாமல் காசை வாங்க அலைக்கழிக்கப்படும் பலருக்கு அந்த ஏஜென்ட் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்பதே தெரிவதில்லை.

முதலில் ஆன்லைனில் காவல்துறைக்கென இருக்கும் பிரத்யேக தளத்தில் புகாரை பதிவு செய்யுங்கள். உங்கள் தொலைப்பேசி எண்ணுக்கு காவல்துறையில் இருந்து 2 நாட்களுக்குள் அழைத்து பேசுவர். அதற்கடுத்து நீங்கள் புகார் கொடுத்திருக்கும் நபரை விசாரித்து உங்கள் புகாருக்கான ஆதாரங்கள் சரி பார்த்தப்பின்னர் FIR போட்டு விடுவார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… 

இல்லை, காவலர்கள் இதில் கவனம் செலுத்தவில்லை என நீங்கள் நினைத்தால் அதற்கும் வழி இருக்கிறது. அருகில் இருக்கும் நீதிமன்றத்தில் இந்த புகாரை FIR-ஆக மாற்றுமாறு ஒரு மனு போடலாம். அதற்கு 2000ரூ முதல் 3000ரூ வரை செலவு எடுக்கும். உங்கள் வக்கீலுக்கான தொகையாக 4000ரூ கேட்கப்படலாம். ஒரு 7000ரூ செலவு ஏற்படும்.

கொடுக்கப்பட்ட பணம் மிகப்பெரிய லட்சத்தில் இருந்தால், உங்கள் பகுதிக்கான High Court-ல் மனு செய்யலாம். இதற்கு 20000 ரூபாயிற்கு குறையாமல் இருக்கும். இதில் வக்கீலுக்கான கட்டணம் தனியாக இருக்கும்.

ஏஜென்ட்களிடம் நீங்கள் பணத்தினை கொடுத்தப்போது எதுவும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பணம் அனுப்பும் செயலி மற்றும் பேங்க் வழியாக செய்த ட்ரான்ஸ்வர் ஸ்க்ரீன்ஷாட்கள் இருந்தால் இந்த கேஸில் அது பெரிய சாட்சியாக இருக்கும்.

ஏஜென்ட் மீது FIR போட்டு விட்டாலே உங்கள் பணம் 60 சதவீதம் கிடைத்து விடும் என நம்பலாம். தொடர்ந்து, இது வழக்காகும் பட்சத்தில் முன் ஜாமீன் மனுவினை எதிர் தரப்பு போடும் போது அதற்கு தடை செய்ய வேண்டும் என மனு போட வேண்டும். இதனால் உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் தான் முன் ஜாமீன் கொடுக்கப்படும் என நீதிமன்ற தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கும். இதை தொடர்ந்து இந்த வழக்கு நடத்தப்பட்டு முறையாக ஆதாரங்களை சரி பார்த்து உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை நீதிமன்றம் தரப்பில் வாங்கி கொடுத்து விடுவார்கள்.

இதற்கும் சில ஆயிரங்களை நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும். இதில், ஒரு சில ஏஜென்ட்கள் இந்த பிரச்னையை நீதிமன்றத்திற்கே போகாமல் மொத்த காசையும் கொடுத்து விடுவதற்கு கூட வாய்ப்பு இருக்கு. ஆனால் உங்க காசுக்கு நீங்க போராடாமல் யார் செய்வார்கள். தைரியமாக முன்னெடுத்தால் தான் உங்க தொகை உங்களுக்கு வரும் என்பதை மறக்காதீர்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts