TamilSaaga
air india express

24 மணி நேரமாச்சு பாஸ்… இன்னமும் சாங்கி ஏர்போர்ட்டில் தவித்துக் கொண்டிருக்கும் பயணிகள் – நேற்று (நவ.26) திருச்சி கிளம்ப வேண்டிய விமானம் பயணிகளுக்கு வைத்த “ஆப்பு”

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று (நவ.26) கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கிட்டத்தட்ட 24 மணி நேரமாக இன்னமும் சிங்கையில் இருந்து கிளம்பாததால் பயணிகள் சாங்கி ஏர்போர்ட்டில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சாங்கி ஏர்போர்ட்டில் இருந்து பயணிகள் மூலம் நமக்கு கிடைத்த தகவலின் படி, “நேற்று (நவ.26) இரவு 9.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணிக்க வேண்டிய பயணிகளும் சாங்கி விமான நிலையத்தில் Departure-க்காக தயாராக இருந்தனர்.

ஆனால், திடீரென விமானம் ரத்து செய்யப்பட பயணிகள் செய்வதறியாது தவித்தனர். இதில், திருச்சிக்கு மிக மிக அவசரமாக செல்ல வேண்டிய பயணிகளும் இருந்ததால், அவர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து, Emergency நிலையில் உள்ள பயணிகள் மட்டும், இன்று (நவ.27) சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள பயணிகள், கிட்டத்தட்ட 24 மணி நேரமாகியும், இன்னமும் சாங்கி விமான நிலையத்தில் தான் காத்திருக்கின்றனர். இன்று இரவு கிளம்பும் விமானத்தில் அவர்கள் அனைவரும் திருச்சி அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், என்ன காரணத்திற்காக நேற்று விமானம் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.

NEWS SOURCE:

Nandana Air Travels, Trichy, Ph – 9791477360

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts